விஜய் படத்தை மண்ணை கவ்வ வைத்த இரண்டு ஹீரோக்கள்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது வம்சி சார்

நடிகர் விஜய்க்கு இந்த வருடம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆன திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். பொதுவாக விஜய் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடிப்பதுண்டு. ஆனால் இந்த முறை புதிய முயற்சியாக நேரடி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு இண்டஸ்ட்ரியல் காலடி எடுத்து வைத்தார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜுவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், வாரிசுடு என்னும் பெயரில் தெலுங்கில் நேரடி ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் ஜனவரி 11 அன்றும், ஆந்திராவில் ஜனவரி 14 அன்றும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தனர்.

Also Read: விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிய நாளிலிருந்து படத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் தான். அதிலும் ஆந்திராவில் மகர சங்கராந்தி அன்று விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. இந்தப் பிரச்சினையை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு எப்படியோ பேசி தீர்த்து வைத்தார்.

இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் ஆந்திராவில் அன்றைய தினம் நடிகர்கள் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்கள் ரிலீஸ் ஆனது தான். உண்மையை சொல்லப்போனால் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அன்றைய நாளில் ரிலீஸ் ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் ஆன பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்கள் அடி வாங்கும் என்பதால் தான்.

Also Read: துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

ஆனால் அங்கு இப்போது நடக்கும் கதையே வேறு. ரிலீஸ் ஆன இந்த மூன்று படங்களில் நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. இரண்டு மடங்கு கலக்சனை இதுவரை அள்ளி இருக்கிறது பாலகிருஷ்ணாவின் திரைப்படம். விஜய் மற்றும் சிரஞ்சீவி படங்கள் டிராப் ஆகிவிட்டது. விஜய்யின் இந்தத் தோல்விக்கு காரணமாக தெலுங்கு ரசிகர்கள் இயக்குனர் வம்சியை தான் கூறுகிறார்கள்.

தெலுங்கு ரசிகர்கள் வாரிசு படம் பல படத்தின் கதையை எடுத்து ஒரு படமாக கொடுத்திருக்கிறார் என்று வம்சியை குறை கூறி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற இயக்குனர்கள் விஜய் மாதிரி மாஸ் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்து விட்டால் அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இதுபோன்று சொதப்பி விடுகிறார்கள். அதைத்தான் இயக்குனர் வம்சியும் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

Also Read: சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

- Advertisement -