இயக்குனர் தங்கர் பச்சானின் முத்தான 5 படங்கள்.. பழைய காதலை நினைத்து உருக வைத்த ‘அழகி’

ஒளிப்பதிவாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இயக்குனர் தங்கர் பச்சான் 2002 ஆம் ஆண்டு அழகி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இவர் படங்கள் பொதுவாக அவருடைய வட்டாரத்தை சார்ந்த படங்களாகவே இருக்கும். தன்னுடைய வட்டார மொழியை படங்களின் மூலம் வளர்த்தவர். மேலும் ரொம்ப எதார்த்தமாக கதை சொல்லக்கூடியவர். குறைவான படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் முத்தான படங்களே.

அழகி: பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடித்த திரைப்படம் அழகி. இந்த படத்தை பார்த்தவர்களில் பலருக்கு தன்னுடைய பழைய, சேராத காதலை நினைவுபடுத்தியது. ரொம்ப எதார்த்தமான காட்சியமைப்பில் பள்ளிப்பருவ காதலை காட்டியது. மேலும் கிராமப்புற சூழலையும், வாழ்க்கைமுறையையும் சொல்லியிருந்தது.

Also Read: சேரனின் தரமான 5 திரைப்படங்கள்.. தூக்கத்தை பறிகொடுத்து காதலில் சுற்ற வைத்த படம்

சொல்லமறந்த கதை: ஆசிரியர் நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் புதினத்தை இயக்குனர் தங்கர் பச்சான் திரைப்படமாக எடுத்தார். இயக்குனராக இருந்த சேரனை ஹீரோ ஆக்கினார். இந்த படம் பொருளாதார வசதி இல்லாத ஒருவன் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்றால் எவ்வாறு அங்கு இருப்பவர்களால் நடத்தப்படுவான் என்று கட்டியிருந்தது.

பள்ளிக்கூடம்: நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் , தங்கர் பச்சான் நடித்த திரைப்படம் பள்ளிக்கூடம். இவர்களின் வாழ்க்கையில் 1978, 1983, 1991, 2004ல் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. எல்லோருக்கும் தன்னுடைய பள்ளி காலங்களிலும், பள்ளிப்பருவ காதலையும் நினைவூட்டியது.

Also Read: சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

ஒன்பது ரூபாய் நோட்டு: நடிகர் சத்யராஜ் சினிமா கேரியரில் மிகமுக்கியமான திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு. இவர் நடித்த மாதவ படையாட்சி கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. 5 பிள்ளைகளை பெற்று செல்வந்தராக இருக்கும் மாதவ படையாட்சி காலம் போக போக பிள்ளைகளாலேயே சொத்துக்காக அவமதிக்கப்படுவது தான் இந்த படத்தின் கதை.

தென்றல்: தங்கர் பச்சான் இயக்கத்தில் மீண்டும் பார்த்திபன் நடித்த படம் தென்றல். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு தலை காதலையும், சமூக சீர்திருத்த கருத்துக்களையும் இந்த படம் எடுத்து கூறியிருந்தது. வித்யாசாகர் இசையமைப்பில் இந்த படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

Also Read: சினேகாவின் முதல் கல்யாணம் நின்றதற்கு காரணம் இதுதான்! தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்தாராமே!