சூப்பர் ஸ்டாரை சந்தித்த ராஜமௌலியின் தந்தை.. என்ன விஷயம் தெரியுமா.?

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவருடைய படங்கள் அனைத்தும் எல்லா மொழி ரசிகர்களையும் கவரும் வண்ணம் இருக்கும்.

அந்த வகையில் தற்போது இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ராஜமௌலி இந்த படத்திற்கு பின்னர் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாகவே உள்ளது. அப்படி பார்க்கும் போது இயக்குனர் ராஜமௌலிக்கு ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஆனால் ராஜமௌலி ஒரு படம் எடுக்கிறார் என்றால் அதில் அனைத்து காட்சிகளுமே ஒரிஜினலாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவார். மேலும் அவருடைய படங்களில் ஹீரோவுக்கு கடும் சண்டை காட்சிகள், உடல்மொழியும் என்று அனைத்தும் ரியலாக இருக்க வேண்டும்.

பாகுபலி திரைப்படத்துக்காக நடிகர் பிரபாஸ் தன்னுடைய உடல் எடையை ஏற்றி நடித்திருந்தார். மேலும் சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சியும் எடுத்தார். ஆனால் இதையெல்லாம் ரஜினிகாந்தால் இப்பொழுது செய்ய முடியாது. இந்த சமயத்தில்தான் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், ரஜினியை எதேச்சையாக சந்தித்துள்ளார்.

அப்போது அவர்கள் இருவரும் கதையைப் பற்றி பேசி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரஜினியை சந்தித்த விஷயத்தை ராஜ மௌலியிடம் அவரது தந்தை கூறியுள்ளார். இப்போது ரஜினி தன்னிடம் கதை கேட்டால் என்ன செய்வது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாராம் ராஜமவுலி.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை