ரஜினியின் கோட்டைக்குள் வெற்றிக்கொடி நாட்டிய ராஜமௌலி.. வசூலை வாரி தந்த படம்

இயக்குனர் ராஜ மௌலி சீரியல் தொடர்களின் மூலம் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார். இன்று இந்திய சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக மாறியிருக்கிறார். ஆரம்ப காலங்களில் சாதாரண கமர்ஷியல் படங்களை கொடுத்து வந்த இவர், 2011 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து மாவீரன் என்னும் வரலாற்று படத்தை இயக்கினார்.

2012ஆம் ஆண்டு நான் ஈ என்னும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால் ராஜமௌலி என்று ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்துக்கும் அடையாளப்படுத்திய திரைப்படம் என்றால் அது பாகுபலி தான். இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் பான் இந்தியா படமாக எடுத்தார்.

Also Read: படுதோல்வி அடைந்த பாபா ரீ ரிலீஸ்.. 3 நாளில் இவ்வளவு தான் வசூலா!

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ மௌலி இயக்கிய திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் இந்த படம் ரிலீஸ் ஆனது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் இந்த படம் கிறங்கடித்தது என்றே சொல்லலாம். ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

ஆர்ஆர்ஆர் படத்தின் இந்தியாவிலேயே இன்னும் குறையாத நிலையில் இந்த படத்தை இயக்குனர் ராஜமௌலி ஜப்பானில் ரிலீஸ் செய்திருந்தார். ஜப்பான் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம். ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம், ஜப்பானில் அதிக வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் இப்போது பெற்று இருக்கிறது.

Also Read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

இந்த தகவலை ஆர்ஆர்ஆர் படத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் ஜப்பானில் அதிக வசூல் செய்த முதல் படம் எனவும், இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஜப்பான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி எனவும் அந்த பதிவில் சொல்லியிருக்கின்றனர். ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் 24 கோடி வசூல் செய்து இருக்கிறது.

ஜப்பான் நாடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோட்டை என்றே சொல்லலாம். இங்கு ரஜினியின் படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெரும். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமே இருக்கிறது. இப்படி ரஜினியின் படங்கள் மட்டுமே ஹிட் ஆகி கொண்டிருந்த நாட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிக வசூல் செய்த இந்திய படமாக வெற்றி பெற்றிருக்கிறது.

Also Read: மோசமான குணத்தால் ரஜினி, கமலே வெறுத்து ஒதுக்கிய முக்கிய காமெடியன்.. பணம் படைத்தவன் மதியை இழப்பான்

- Advertisement -