மணிரத்தினத்தின் மொத்த வசூல் டார்கெட்டும் இதுதான்.. பான் இந்தியா ரிலீஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு

இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் லைகா ப்ரொடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் எல்லாம் முடிந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

உடல் நிலை சரியில்லாத சோழ மன்னன் சுந்தர சோழனுக்கு அடுத்து அரியணை யார் ஏறப்போவது, மன்னனைக் காண வரும் அவனின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலனை மர்மமான முறையில் கொன்றது யார் என்ற மையக்கருத்தை கொண்டது தான் பொன்னியின் செல்வன். இது கல்கியின் நாவல் ஆகும்.

Also Read: பொன்னியின் செல்வனுடன் மோதவிருக்கும் 2 பிரபலங்கள்.. தமிழனுக்கு தமிழனே சப்போர்ட் பண்ணலைனா எப்படி ?

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், சாரா அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜெய சித்ரா, கிஷோர், மோகன் ராமன், ரகுமான், நாசர், நிழல்கள் ரவி, விஜய் ஜேசுதாஸ், மோகன் ராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்துக்கான மொத்த பட்ஜெட் 570 கோடி. ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து அதை விட அதிகமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்திய படம் பொன்னியின் செல்வன். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகிறது.

Also Read: சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

இந்த படம் ஏற்கனவே ஓடிடி உரிமம், சேட்டிலைட் உரிமம் என ஓரளவுக்கு கல்லா கட்டிவிட்டது. இத்தனை கோடியில் படம் பண்ணும் மணிரத்தினம் போட்ட பணத்தை திரும்ப எடுக்க பக்கா பிளானும் போட்டு வைத்திருக்கிறார். அதாவது இயக்குனர் மணிரத்தினத்தின் மொத்த டார்கெட்டும் கோலிவுட் வசூல் மட்டும் தான். இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம்.

மற்ற மொழிகளின் வசூலை எல்லாம் மணிரத்தினம் கணக்கில் வைக்கவே இல்லையாம். அந்த மொழிகளில் இருந்து வரும் வசூல் எல்லாம் படத்திற்கான போனஸ் என்கிறார்கள். இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளையும் படக்குழு சிறப்பாக செய்து வருவது குறிப்பிடதக்கது.

Also Read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனை கைப்பற்றிய நிறுவனம்