மணிரத்னத்தின் வாழ்க்கையில் அடித்த பெரிய லக்.. தோல்வி நேரத்திலும் பயன்படுத்தாத உலக நாயகன் மருமகன்!

இயக்குனர் மணிரத்தினம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கிறார். காலத்திற்கு ஏற்ப தன்னுடைய கதைகளை மாற்றிக் கொள்வதால் மணிரத்தினத்தால் இன்றும் நிலைத்து நிற்க முடிகிறது. இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றது போல் ஓ காதல் கண்மணி போன்ற படங்களையும் இவர் எடுக்கிறார், பொன்னியின் செல்வன் போன்று வரலாற்று காவியங்களையும் இவர் எடுக்கிறார்.

மணிரத்தினம் இயக்குனர் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளரும் கூட. அவருடைய அண்ணன் ஜி.ஸ்ரீனிவாசனுடன் இணைந்து இவர் மெட்ராஸ் டாக்கீஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் இருவர், அலைபாயுதே போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்திருந்தாலும் ஒரு சில படங்களால் நஷ்டத்தை தான் அதிகமாக சந்தித்தது.

Also Read:அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

இதற்கிடையில் இயக்குனர் மணிரத்தினம் உலகநாயகன் கமலஹாசனின் உடன் பிறந்த அண்ணன் மகளான சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். சுஹாசினி, மணிரத்தினத்தை திருமணம் செய்வதற்கு முன்பே ஒரு மிகப்பெரிய நடிகை. அவர் திருமணம் செய்து வரும் பொழுது மணிரத்தினம் பேங்க் அக்கவுண்டில் வெறும் 15 ஆயிரம் மட்டும் தான் இருந்ததாம். இதை சுஹாசினியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

கமலஹாசனின் அண்ணன் மகளாக சினிமாவிற்குள் சுஹாசினி வந்திருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் நிலைத்து நின்றார் என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய முதல் படமான நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்திலேயே தேசிய விருது வென்ற நடிகை இவர். மேலும் இயக்குனர் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் இவர் நடித்த சிந்து பைரவி திரைப்படத்திற்கும் தேசிய விருது வாங்கினார்.

Also Read:எண்டு கார்டே இல்லாத பொன்னியின் செல்வன்.. மணிரத்தினம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் லைக்கா

மணிரத்தினம் நினைத்திருந்தால் சுஹாசினியை வைத்து எத்தனையோ படங்களை இயக்கியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு பிரபலமான நடிகை தன்னுடைய மனைவியாக இருந்தாலும் இதுவரைக்கும் தன்னுடைய தோல்வி நேரங்களில் கூட அவர் சுஹாசினியை ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. இத்தனைக்கும் படத்தின் கதை டிஸ்கஷன் மற்றும் டப்பிங் எல்லாம் கூட அவர் செய்திருக்கிறார்.

இத்தனைக்கும் இவர் கமலஹாசனின் நெருங்கிய உறவினர் கூட. நினைத்திருந்தால் சுஹாசினி மூலம் கமலஹாசனை கூட அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வைத்திருக்கலாம் அல்லது கமலஹாசனின் மூலம் எத்தனையோ முன்னணி ஹீரோக்களை தன் படங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் இது எல்லாம் ஒருபோதும் மணிரத்தினம் செய்யவே இல்லை.

Also Read:விடாமல் வட்டமிடும் ருசி கண்ட பூனை.. பொன்னியின் செல்வன்-2 மொத்தத்தையும் வாரி தின்னும் லைக்கா!