ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோலிவுட்டின் கேம் சேஞ்சர்..சூப்பர் ஸ்டாரையே காக்க வைக்கும் லோகேஷ் கடந்து வந்த பாதை

லோகேஷ் கனகராஜ், எம்பிஏ படித்து வங்கி ஊழியராக இருந்த ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகின் இயக்குனராக அறிமுகமானபோது இவர் இன்னும் நான்கு வருடங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக மாறுவார் என்று சொல்லி இருந்தால் அப்போது யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். இதற்கு காரணம் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், எந்த இயக்குனருக்கும் உதவியாளராக கூட பணிபுரியாமல் சினிமாவுக்குள் வந்தவர் லோகேஷ்.

ஒரு தனியார் நிகழ்ச்சியின் குறும்பட போட்டியில் கலந்து கொண்ட லோகேஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் சிறிய உந்துதலால் தமிழ் சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் காலடி எடுத்து வைத்தார். தன்னுடைய முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தரமான ஒரு ஹிட் படத்தை கொடுத்தார் இவர்.

Also Read: இவரை மாதிரி ஒரு ஆளு தான் தயாரிப்பாளருக்கு தேவை..படம் ரிலீசுக்கு முன்னாடியே லாபத்தை கொடுக்கும் லோகேஷ்

நடிகர் கார்த்தியை வைத்து இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதைக்களத்தை கைதி என்னும் திரைப்படமாக எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் லோகேஷ் கனகராஜ் என்றால் யார் என்று திரும்பிப் பார்க்க வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும் .கைதி திரைப்படத்தின் தாக்கம் தன்னுடைய அடுத்த படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பாக இவருக்கு அமைந்தது.

தளபதி விஜய் கதாநாயகன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் என்று ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கூட்டணியில் மாஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார் லோகேஷ். ஒரு பக்கம் விஜய் மறுபக்கம் விஜய் சேதுபதி இரண்டு பேருக்குமே எந்த ஒரு இடத்திலும் மாஸ் மற்றும் கிளாஸ் குறையாதவாறு இந்த படத்தை இரண்டு பேரின் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளும்படி இயக்கி இருந்தார்.

Also Read: லோகேஷ் நண்பரால் சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.. இப்படி SK-வை அசிங்கப்படுத்த என்ன காரணம்!

மாஸ்டர் படத்தின் வெற்றி லோகேஷை தமிழ் சினிமாவின் மற்றொரு கட்டத்திற்கு நகர்த்தியது என்பதை விட லோகேஷ் தமிழ் சினிமாவை மற்றொரு கட்டத்திற்கு நகரத்தினார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி அமைந்தது தான் விக்ரம் திரைப்படம். உலக நாயகன் கமலஹாசனை வைத்து மல்டி ஸ்டார்ஸ் கான்செப்டில் விக்ரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு வசூலையும் வாரி கொடுத்தது.

விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரிய ஒட்டு மொத்த இந்திய சினிமா கலைஞர்களும் காத்து கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்து கிடக்கிறார். இவருடைய திறமைக்கு இந்த ஆறு வருட வளர்ச்சி என்பதே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

Also Read: லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ்.. லோகேஷ்க்கு ட்ரீட் கொடுத்த புகைப்படம்

 

- Advertisement -

Trending News