புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்.. பெரிய கேள்விக்குறியில் அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள்

கோலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் எடுத்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால் தற்போது முன்னணி இயக்குனராக கலக்கிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் உலக நாயகனின் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு, இப்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு விஜய்- லோகேஷ் காம்போவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் ஆனது. இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

Also Read: லியோக்கு வலைவீசி தோற்றுப்போன அஜித்.. அடுத்த மூன்றெழுத்து நடிகரின் படத்தை டார்கெட் செய்த ஏகே

இதனால் அடுத்தடுத்து இயக்குனராக படங்களை கமிட் செய்வதை விட நடிகராக நிறைய படங்களை கமிட் செய்து விடுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஏற்கனவே முக்கியமான நடிகர்கள் நடிக்க வேண்டிய படம் கடைசியாக கைமாறி ஆர்ஜே பாலாஜிக்கு வந்துள்ளது.

முக்கியமாக இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்தாலும் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது. இதற்கு முன்பு இயக்குனராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நடிகராக அவதாரம் எடுப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Also Read: வில்லன் நடிகரால் தலை வலியில் லோகேஷ்.. லியோ படப்பிடிப்பில் நடக்கும் குளறுபடி

இவ்வளவு பெரிய பிஸியிலும் லோகேஷ் கனகராஜ் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார் என்றால் பெரிய ஆச்சரியம். இவரது நண்பர் ஆர்ஜே பாலாஜி கேட்டுக் கொண்டதால் நடித்திருக்கிறாராம். ஒரு வேளை நடிப்பு நல்லா இருந்து நிறைய படங்கள் வந்தால் படம் இயக்குவாரா மாட்டாரா என பயம் இப்போதே வந்துள்ளது. சமீப காலமாகவே இளம் இயக்குனர்கள் பலரும் நடிகர்களாகவும் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணத்திற்க்கு காந்தாரா படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷிப் ஷெட்டி, லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் இவர்களுடைய வரிசையில் இப்போது லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ளார். மேலும் இயக்குனர்களாக லோகேஷை பார்த்த ரசிகர்களுக்கு அவர் நடிகராக நடிக்கக்கூடிய சிங்கப்பூர் சலூன் படத்தினை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: கடும் குளிரில் எடுக்கப்பட்ட 5 படங்கள்.. காஷ்மீரில் உறைந்த லியோ படக்குழு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை