வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா

1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா அவர்கள் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தந்ததோடு சிறந்த நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவ்வப்போது ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்த பாரதிராஜா முதன்முறையாக 2004 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தன் பயணத்தை தொடங்கினார்.

ஆயுத எழுத்து திரைப்படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் பாரதிராஜா அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில் கடந்த வருடம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது பல திரைபிரபலங்களும் அவருடைய உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்தனர். உடல்நிலை கொஞ்சம் சரியான பிறகு மீண்டும் பாரதிராஜா நடிக்க ஆரம்பித்தார்.

Also Read: பாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் பாரதிராஜா நடித்திருந்தார். தற்போது அழகி, பள்ளிக்கூடம் போன்ற கிராமிய கதைகளின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் இவர்.

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகிறது’ என்ற இந்த படத்தில் பாரதிராஜா, ஜிவிஎம், வைரமுத்து, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். லோ பட்ஜெட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் தொடக்க விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பாரதிராஜா இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்து இருக்கிறார்.

Also Read: மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் பாரதிராஜா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாரதிராஜாவுக்கு நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. தன்னை முக்கியமான கதாபாத்திரத்தில் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். இன்று வரை அதை அவரால் செய்ய முடியவில்லை.

இவர் சமீபத்தில் நடித்த படங்களாக இருக்கட்டும், பங்கேற்ற விழாக்களின் போது ஆகட்டும் ரொம்பவே உடல்நிலை சரியில்லாதது போல் தான் காணப்பட்டார். எனவே இனி படங்களில் நடிக்க முடியாது என்ற ஒரு நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் பாரதிராஜா. அவர் சொல்வதை பார்த்தால் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகிறது திரைப்படம் தான் இயக்குனர் இமயத்தின் கடைசி திரைப்படமாக இருக்கும்.

Also Read: பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 5 த்ரில்லர் படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்

- Advertisement -

Trending News