சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கனவு படத்தை இயக்க ஆசைப்படும் அமீர்.. தளபதி மனசு வச்சாதான் உண்டு

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, ராம் போன்ற பல எதார்த்தமான திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அமீர். அதைத் தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஆதி பகவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியிருந்த அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி தன்னுடைய எதார்த்தமான படைப்புகளின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அமீர் தளபதி விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்திருந்தார்.

இவருடைய அந்த கதை விஜய்க்கு பிடித்துப் போனதால் அவரும் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். கண்ணபிரான் என்ற தலைப்பில் உருவாக இருந்த அந்தப் படத்திற்காக விஜய் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் விஜய் சில திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இந்த கண்ணபிரான் திரைப்படத்தை சில காலங்கள் கழித்து உருவாக்கலாம் என்று தள்ளி வைத்திருந்தனர். ஆனால் பல வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்போது வரை அந்த திரைப்படம் உருவாகாமல் இருக்கிறது.

ஒரு வகையில் இந்த கண்ணபிரான் இயக்குனர் அமீரின் கனவு திரைப்படம். அதைப்பற்றி அவர் தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். அவரிடம் கண்ணபிரான் திரைப்படம் மீண்டும் உருவாகுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர் அந்த படம் உருவாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நான் கதை சொன்ன விஜய் வேற, இப்போது அவர் வேற லெவலில் எங்கேயோ போய்விட்டார். அதனால் அவர் மீண்டும் இந்த கதையில் நடிக்க சம்மதிப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அவர் முழு மனதுடன் இதில் நடித்த சம்மதித்தால் கண்ணபிரான் மீண்டும் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அமீரின் இந்த கருத்துக்கு விஜய் என்ன பதிலளிப்பார் என்று தற்போது பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News