சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அவங்க ரசிகர்களை குஷிப்படுத்த தில்ராஜு செய்த கேவலமான வேலை.. மேடையில் விஜய்யால் ஏற்பட்ட சர்ச்சை

பொங்கல் தினத்தன்று வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் கலையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இப்படம் அமைந்ததால் எந்தவித நஷ்டமும் ஏற்படாமல் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை படைத்தது. இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தான் தயாரித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தில் ராஜு. இவர் சாதாரண நடிகர்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமல் டாப் ஹீரோக்களின் படங்களை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பதில் கில்லாடி ஆனவர். அதனால் தான் தமிழில் விஜய் படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

Also read:  அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்ட தில்ராஜு.. பணத்திற்காக போடும் இரட்டை வேஷம்

அந்த வகையில் இவர் எதிர்பார்த்த அளவைவிட அவருக்கு பெருத்த லாபத்தை ஈட்டியது. தமிழ்நாட்டில் வந்து இவ்வளவு லாபத்தை பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இப்பொழுது ஒரு கேவலமான விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது இப்பொழுது இவர் தெலுங்கு படத்தை ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்காக அந்தப் படத்தின் டிரைலர் வெளியிட்டு நிகழ்ச்சியில் மேடையில் இவர் பேசிய போது விஜய்யை மிகவும் மட்டம் தட்டி பேசி இருக்கிறார். அது இப்பொழுது இணையதளத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் பேசியது என்னவென்றால் தனது முந்தைய படமான வாரிசு படம் போல் சண்டை காட்சிகள், டான்ஸ் மற்றும் விஜய்யின் பாடி லாங்குவேஜ் போல் இருக்காது.

Also read: 300 கோடி வசூல் வந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை.. வாரிசால் புலம்பி தவிக்கும் தில் ராஜு

ஆனால் இந்த படம் அதையெல்லாம் தாண்டி ஒரு என்டர்டைன்மென்ட் படமாக கண்டிப்பாக உங்களுக்கு ரசிக்கும் படியாக இருக்கும். அதேபோல் இது முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களுக்கான படம் என்று மிகவும் திமிரான பேச்சை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்டு அங்குள்ள ரசிகர்கள் கேலியும், கிண்டலுமாக கைத்தட்டி ஆரவாரப்படுத்தி இருக்கிறார்கள்.

இவருடைய இந்த மாதிரியான பேச்சு கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இணையதளத்தில் கலாய்த்து வருகிறார்கள். இனிமேல் இவருடைய படம் தமிழில் ஓடுவதற்கு வாய்ப்பில்லை என்று விஜய் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Also read: விஜய் போல் சிம்புவும் கொடுக்கும் முக்கியத்துவம்.. மொத்த நெட்வொர்க்கையும் வளைக்கப் போகும் பத்துதல

- Advertisement -

Trending News