அவர் இருந்திருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார்.. டிக்கிலோனா பட சீக்ரெட்டை உடைத்த யோகி பாபு

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் யோகி பாபு. ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக இருந்த யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு ஏராளமான படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென தனிப் பெயர் பெற்ற காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். ஆனால் சமீபகாலமாக அவர் காமெடியை தவிர்த்து ஹீரோவாக மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட காமெடி நடிகருக்கான காலி இடத்தை யோகி பாபு நிரப்பி விட்டார்.

மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு காமெடி செய்து மகிழ்விப்பது அனைவராலும் முடியாத ஒன்று. ஆனால் யோகி பாபு அதை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். தன்னைத்தானே கேலி செய்து பிறரை சிரிக்க வைக்கும் யோகி பாபு படங்களில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அது போலவே நகைச்சுவையாக பேசி கலகலப்பூட்டி வருகிறார்.

சந்தானம் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி ஜோனரை மையப்படுத்தி சமீபத்தில் வெளியாகி உள்ள டிக்கிலோனா படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ள யோகி பாபுவிற்கு பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டிவிட்டர் ஸ்பேசசில் டிக்கிலோனா படக்குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

dikkilona
dikkilona

அப்போது பேசிய யோகிபாபு, “என்னைய போய் ஐன்ஸ்டீனா நடிக்க வெச்சிருக்காங்க. ஐன்ஸ்டீன் இப்போ உயிரோட இருந்திருந்தா என்னைய செருப்பாலயே அடிச்சிருப்பாரு. நான் ஏதோ ஃபார்முலாவ தப்பா சொல்லிட்டேன்னு எல்லாரும் பேசிக்குறாங்க. நான் ஐன்ஸ்டீனா நடிச்சத கூட ஏத்துக்குவாங்களாம். ஆனா நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துக்க மாட்டாங்களாம்.

உண்மையில் அந்த ஃபார்முலா என்னுடைய கார் நம்பர்” என்று மிகவும் நகைச்சுவையாக பேசி அனைவரையும் யோகி பாபு சிரிப்பலையில் மூழ்கடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ள யோகி பாபு தமிழ் சினிமாவில் மேலும் மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை வெல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்