இறப்புக்கு முன் கடைசியாக நடித்த 5 பிரபலங்களின் படங்கள்.. வெளிவந்த சில நாட்களிலேயே உயிரிழந்த பரிதாபம்!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களது படங்கள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல படங்களில் நடித்து நமக்கு மிகவும் பரிச்சயமான சில நடிகர், நடிகைகளின் இறப்பு நம்மை துயரில் ஆழ்த்தி இருக்கும். அவ்வாறு இறப்புக்கு முன் அந்தப் பிரபலங்கள் நடித்த படங்கள் எது என்பதை பார்க்கலாம்.

ஸ்ரீவித்யா: தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் நடிக்க கூடியவர். பிரஷாந்த் நடிப்பில் வெளியான லண்டன் படத்தில் கடைசியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். இவர் 2003ஆம் ஆண்டு முதுகெலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு 2006 இல் உயிரிழந்தார்.

ரகுவரன்: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரகுவரன். இவர் கடைசியாக தனுஷின் தந்தையாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார். ரகுவரன் உடல்நலக்குறைவால் 2008ல் காலமானார்.

சுஜாதா: தமிழ் சினிமாவில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜாதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சுஜாதா கடைசியாக அஜித்தின் வரலாறு படத்தில் கனிகாவிற்கு அம்மாவாக நடித்திருந்தார்.

மணிவண்ணன்: தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகராக கால்பதித்தவர் மணிவண்ணன். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம் ஏ எம்எல்ஏ படத்தை நடித்து, இயக்கி இருந்தார். இப்படம் 2013 இல் வெளியானது. இப்படம் வெளியான சில நாட்களிலேயே மணிவண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

வினு சக்கரவர்த்தி: குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் வினு சக்ரவர்த்தி. இவர் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வினு சக்ரவர்த்தி கடைசியாக 2014 இல் வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அதன் பிறகு உடல்நலக்குறைவால் பல ஆண்டு சிகிச்சை பெற்று வந்த வினு சக்ரவர்த்தி கடந்த 2017 இல் உயிரிழந்தார்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -