ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கே ஜி எஃப் படப்பிடிப்பில் சில்மிசம் செய்தாரா ஹீரோ? பளிச்சுனு பதில் அளித்த நடிகை

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎஃப். இப்படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனால் இரண்டாம் பாகம் ஒரு பான் இந்தியா படமாக வெளிவந்தது. கன்னடா சினிமா வரலாற்றிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் அதிகளவில் வசூல் சாதனையை செய்தது.

அத்துடன் இந்த படத்தில் நடித்த கன்னட நடிகர் ஆன யாஷ் க்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். கன்னடத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகிறார்கள். எங்கே திரும்பினாலும் ராக்கி பாய், ராக்கி பாய் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி வந்தார்.

Also read: KGF யாஷ் போல மரண மாஸாக இருக்கும் சிம்பு.. பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

அப்படிப்பட்ட இவர் பெரிய ஹீரோவாக வளர்ந்து வரும் நிலையில் இவர் பெயரைக் கெடுப்பதற்காக சில வலைதளங்களில் இவரைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவந்தது. அதாவது கே ஜி எஃப் படப்பிடிப்பின் போது இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீ நிதியை அதிகளவில் தொந்தரவு செய்ததாக அவர் மீது குற்றச்சாற்றுகள் வந்தது.

அத்துடன் இனி யாஷ் நடிக்கும் எந்த படங்களிலும் நான் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன், அவரை நான் முழுமையாக வெறுக்கிறேன் என்று ஸ்ரீநிதி கூறியதாக தகவல்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக வெளிவந்தது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்து வந்தது. இதனால் யாஷ் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

Also read: தமிழ் சினிமாவை உற்று பார்க்க வைத்த 2 படங்கள்.. பொறாமையில் KGF, சீதாராமை வைத்து பண்ணும் அரசியல்

ஆனால் இப்பொழுது இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை நேரடியாக விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது அந்த மாதிரி எந்த ஒரு விஷயங்களும் எனக்கு சூட்டிங் இல் நடக்கவில்லை. நீங்களே தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் இது அவர்களின் சினிமா கேரியரில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையும் பாதிப்படையும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் யாஷ் ஒரு நல்ல மனிதர் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரும் கூட அதனால் இந்த மாதிரி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெளிவாக இவருடைய இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவருடன் இணைந்து நான் நடித்ததை மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். அத்துடன் அவருடைய நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்றும் கூறியிருக்கிறார். அதனால் ஒரு பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பளிச்சின்னு பதில் அளித்து இருக்கிறார்.

Also read: நடிகைகளை தாண்டி மனதில் பதிந்த 7 கதாபாத்திரங்கள்.. KGF படத்தில் பட்டையை கிளப்பிய மாளவிகா

- Advertisement -

Trending News