திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சர்க்கரை நோயை 1/2 மணி நேரத்தில் குணப்படுத்த முடியுமா? மருத்துவர்கள் கண்டுபிடிப்பு.. உலகமே ஆச்சர்யம்!

Diabetes: உடலில் உள்ள கணையம் போதிய அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாமல் போகிறபோதும், உடலின் செல்கள் ஹார்மோன் விளைவுகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட நோய் என்பதால் இந்த நோயால் பாதித்தவர்களும், இந்த நோய் முற்றியவர்களும், இந்த நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருபவர்களும் பெரும் பாதிப்பிற்கும், பதற்றத்திற்கும் ஆளாகின்றனர்.

கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யவில்லை என்றாலோ, அது உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட உடலும் பயன்படுத்தாதபோது நீரிழிவு ஏற்படுகிறது. இந்த இன்சுலின் என்பது ரத்தக் குளுகோசை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும் ஹார்மோன் ஆகும்.

இந்த இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் அல்லது குறைவு என்பது போக போக உடலில் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் அதிக சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது இளையோர் முதல் முதியோர் வரை அனைவரிடத்திலும் காணப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய் வந்தால், அதிக தாகமும், அதிக சிறுநீர் கழிப்பதும், மங்கலான பார்வை, உடற்சோர்வு, எடை குறைவு இதெல்லாம் நோயின் அறிகுறிகளான உள்ளன. இந்த நோய் முற்றும் பட்சத்தில், இதயம், கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகளில் உள்ள ரத்த நாளங்களைச் சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கு மருத்துவ முறைகள் உலகம் முழுவதும் உள்ள நிலையில், அரைமணி நேரத்தில் சக்கரை நோய் குணமாகும் முறையை சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, 25 வயது பெண் ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, நீரிழிவு ஊசி தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

அந்த நோயாளியின் உடலின் உள்ள கணையப் பகுதியில் இருக்கும் திசுக்களில் கொஞ்சம் வெளியே எடுத்து, அந்த திசுக்களுடன் ரசாயன மூலக்கூறை சேர்த்துவிட்டு, திருத்தங்கள் செய்ய வேண்டும், அதன்பின் அதை மீண்டும் உடலில் வைத்துவிட்டால் நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் எடுத்துக் கொண்ட மொத்த நேரமே அரைமணி நேரம்தான் என்று ஷாங்காய் நகரைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையான சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உணவு, உறக்கம், பணி போன்றவற்றால் பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு எல்லோருக்கும் நீரிழிவு நோயில் இருந்து குணமடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் கருத்துகள் கூறிவருகின்றனர்.

- Advertisement -

Trending News