துருவ நட்சத்திரம் தாமதமாவதற்கு இவர் தான் காரணமாம்.. கடும் கோவத்தில் விக்ரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் ஆரம்பித்து பல வருடங்களாகியும் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் உள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் விக்ரம் மிகவும் ஸ்டைலாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் பல படங்களில் நடித்து வருவதால் தான் இந்தப் படம் இவ்வளவு தாமதம் ஆகிறது என்ற ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் உண்மையில் இப் படத்தின் தாமதத்திற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் காரணம் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது இதுவரை எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் காட்சிகளை விக்ரம் பார்க்க வேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார். முதலில் மறுத்த இயக்குனர் பின்பு விக்ரமிடம் படத்தை காட்டியுள்ளார்.

படத்தின் காட்சிகள் சிறப்பாக வந்ததை அடுத்து விக்ரம் மேலும் 15 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை முடித்து விடுங்கள் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் முதலில் டப்பிங் பேசி விடுங்கள் பின்பு கிளைமாக்ஸ் காட்சியை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எங்கே டப்பிங் பேசினால் படத்தை முழுமையாக முடிக்காமல் வெளியிட்டு விடுவார்களோ என்ற பயத்தில் விக்ரம் முழு படத்தையும் முடித்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதன் காரணமாக விக்ரம் மற்றும் கௌதம் வசுதேவன் இருவருக்கும் ஒரு பனிப்போர் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்றே சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில் வெளியாகி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்