பாகுபலி போல் ரெடியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்.. கௌதம் மேனனின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் தொடங்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி வந்தது.

துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ள படத்தை வேண்டுமென்றே சொதப்பி வைத்துள்ளார் கவுதம் மேனன்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்குப் பிறகு கௌதம் மேனனின் சினிமா மார்க்கெட் செம அடி வாங்கியுள்ளது. துருவ நட்சத்திரம் படம் வெளியானால் மட்டுமே அவருடைய மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

ஆனால் தற்போது வரை துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதே தெரியாமல் படமாக்கி கொண்டிருக்கிறாராம் கவுதம் மேனன். கதையை முழுமையாக முடிக்காத காரணத்தால்தான் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பது கூடுதல் தகவல்.

dhruva-natchathiram-cinemapettai
dhruva-natchathiram-cinemapettai

அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட நாலரை மணி நேர படமாக உருவாகியுள்ளதாம் துருவ நட்சத்திரம். எந்த காட்சியை வெட்டினாலும் படம் பாதிக்கும் என்பதால் இந்த படத்தை பாகுபலி ஸ்டைலில் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துவிட்டாராம் கவுதம் மேனன்.

இதனால்தான் விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் முதல் பாகம் வெளியாகும் எனவும் கூறுகின்றனர். மூன்று வருடத்திற்கு முன்னர் இருந்த அதே வரவேற்பு இப்போதும் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

- Advertisement -