எவ்வளவு போராடியும் மன வருத்தத்தில் சீயான்.. 2 நல்ல கதைகளை மறுத்த துருவ் விக்ரம் அடைந்த தோல்வி

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலஹாசனுக்கு இணையாக தனது உடலை மிகவும் வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர் தான் சீயான் விக்ரம். இவர் தனது மகன் துருவ் விக்ரமை எப்படியாவது சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக கொண்டு வருவதற்கு ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறார்.

ஆனால் ஆரம்பத்தில் துருவ் விக்ரமிற்கு வந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டு இருக்கிறார். இந்நிலையில் அந்தப் படங்களிலும் இவர் நடித்திருந்தாலும் கூட சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பார். அப்படி இவர் தவறவிட்ட படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இப்படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்றாகும்.

Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு மோகன் தயாரிப்பில் ஜெயம் ரவி, அசின், பிரகாஷ்ராஜ், நதியா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படமானது இன்றுவரையிலும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் துருவ் விக்ரமிடம் தான் இயக்குனர் சென்றுள்ளார். ஆனால் இவர் நடிக்க மறுத்து விட்டதால் அந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு சென்றது. இதனை அடுத்து 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பசங்க. இதில் பள்ளி சிறுவர்களை மையமாக வைத்து அவர்களுக்குள் நடக்கும் போட்டிகளையும், குறும்புத்தனங்களையும் மையமாக வைத்து இப்படம் ஆனது வெளிவந்துள்ளது. 

Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

இப்படத்தில் விமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் துருவ் விக்ரம் தான் நடிப்பதாக இருந்தது ஆனால் ஏதோ சில காரணங்களால் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். அதிலும்  இவர் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படம் சர்ச்சைக்குரிய படமாக வெளிவந்தது. இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் முகம் சுழிக்க கூடி வகையில் அமைந்திருந்தது. இவர் ஆரம்பத்தில் செய்த தவறினால் இன்றுவரையிலும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனால் சீயான் விக்ரம் தனது மகனை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Also Read: பழிக்குப் பழி வாங்கிய இயக்குனர்.. இன்று வரை ஜெயிக்க முடியாமல் தவிக்கும் துருவ் விக்ரம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை