விஜய்க்கு போட்டியா களமிறங்கும் துருவ் விக்ரம்.. மகனுக்காக அப்பா சியான் 6 மாதமாக செய்யும் தவம்

Dhruv Vikram to compete with Vijay: சினிமாவில் வாரிசு நடிகர்களாக உள்ளே நுழைந்தாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு பலரையும் உதாரணமாக சொல்லலாம். அதனால் எப்படியாவது தன் மகனை சினிமாவில் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும் என்று விக்ரம் சில வருடங்களாக போராடி வருகிறார். அதற்காக போகாத இயக்குனர் இல்ல, கேட்காத கதையும் இல்லை.

ஆனாலும் தற்போது வரை துருவ் விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும் படி எந்த படமும் சூப்பர் என்று ஹிட் அடிக்கவில்லை. இதனால் சியான் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்களும் மக்களிடம் ரீச் ஆகவில்லை, பையன் நடித்த படமும் இப்படி தடுமாறுகிறதே என்று கவலைப்படுகிறார். அந்த வகையில் கடைசியாக தற்போது ஒரு நல்ல கதையை துருவ் விக்ரம்காக கமிட் பண்ணி இருக்கிறார்.

அதாவது விஜய்க்கு ஒரு மாஸ் படமாகவும், டர்னிங் பாயிண்டாகவும் கில்லி படம் கை கொடுத்தது. அதுபோல தற்போது துருவ் விக்ரம் நடிக்கப் போகும் படத்தின் கதை என்னவென்றால் “கபடி” விளையாட்டு. அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க தூத்துக்குடி சுற்றியே எடுக்கப் போகிறார்கள். இப்படித்தான் விஜய், கில்லி படத்தின் மூலம் அவருடைய கேரியரில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

Also read: கஷ்டப்பட்டு நடித்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக இருந்தும் போராடும் விக்ரம் பிரபு

அதே மாதிரி தன்னுடைய பையனுக்கும் இப்படம் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் கடந்த ஆறு மாதமாக கபடி விளையாட்டு பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் படித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் துருவ் விக்ரம் கபடி கற்றுக் கொள்வதற்காக தனிப்பட்ட முறையில் கோச்சிங் எடுத்து வருகிறார்.

எப்படியாவது இப்படத்தின் மூலம் தன்னுடைய கேரியரில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விடாமுயற்சி உடன் செயல்பட்டு வருகிறார். மேலும் இப்படத்தை இயக்கப் போவது யார் என்றால் மாரி செல்வராஜ். முக்கால்வாசி இவர் எடுக்கக்கூடிய படங்களில் உள்ள கதைகள் மக்களிடம் ரீச் ஆகிவிடும். அத்துடன் இவருடைய படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவிடும்.

அதன் மூலம் விக்ரம் மற்றும் அவருடைய பையனும் பெருமூச்சு விட்டு நிம்மதி அடையப் போகிறார்கள். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாகப் போகிறது. துருவ் விக்ரமை பொருத்தவரை நடிப்பில் குறைய சொல்ல முடியாது, அந்த அளவிற்கு கச்சிதமாக நடிக்கக்கூடிய திறமை இருக்கிறது. தற்பொழுது அதற்கு ஏற்ற மாதிரி மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கப் போவதால் வெற்றி நிச்சயம்.

Also read: புது கூட்டணியில் விக்ரம்.. முதன்முதலாக மாஸ் வில்லனுடன் இணையும் சியான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்