தன்னைவிட 7 வயது மூத்த நடிகைக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்.. வயசா முக்கியம், படம் வரும் பாருங்க என்கிறாராம்

சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் எப்போதுமே சற்று கூடுதலாக தான் இருக்கும். மற்றவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததை விட வாரிசு நடிகர்களுக்கு ஈசியாக கிடைத்துவிடும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்பதில்தான் அவர்களது திறமை சோதித்து பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் போன்றோர் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஹீரோ என்றால் அது விக்ரம் மகன் துருவ் விக்ரம் தான்.

துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்யா வர்மா திரைப்படம் நடிப்புக்கு பெயர் வாங்கிக் கொடுத்தாலும் வசூல் நாயகன் என்ற உயரத்தை எட்டிப் பிடிக்க உதவவில்லை. இருந்தாலும் விக்ரம் தொடர்ந்து தன்னுடைய மகனுக்கு திறமையான இயக்குனர்களை தேடி பிடித்து கொடுக்கிறார்.

அந்தவகையில் அடுத்ததாக துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் அதற்கு முன்பே விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்புராஜின் சீயான்60 படத்தில் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்ரன் நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் துருவ் விக்ரம்(25) ஜோடி யார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அதனை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

vanibhojan-joins-chiyaan60
vanibhojan-joins-chiyaan60

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக சீயான் 60 படத்தில் வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். வாணி போஜன்(32) துருவ் விக்ரமை விட ஏழு வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிகர்கள் வயது குறைந்த நடிகைகளுடன் நடிக்கும் போது இளம் நடிகர்கள் மூத்த நடிகைகளுடன் நடிக்க கூடாதா என்ன. இதை ஒரு பேச்சாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக்கியுள்ளனர்.