பிரம்மாஸ்திரத்தை கையிலெடுக்கும் தோனி.. மொத்தமாக மாறும் சிஎஸ்கே

டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ளது. கடந்த முறை டெல்லி அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த முறை முதல் லீக் ஆட்டத்தில் டெல்லியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளது சென்னை அணி. டெல்லி அணியின் புதிய கேப்டனாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் செயல்படுகிறார்.

இந்த ஐபிஎல்லில் சென்னை அணியில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் தோனி. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் கடைசி மூன்று போட்டிகளில் ரூத்துராஜ் சிறப்பாக ஆடினார். இதனால் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ruturaj-Cinamapettai.jpg
Ruturaj-Cinamapettai.jpg

வெளிநாட்டு வீரர்களில் டு பிளசிஸ், சாம் கரன், மொயின் அலி கண்டிப்பாக அணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. பவுலிங் யூனிட்டில் தாஹிர் அல்லது மிட்சல் சான்டர் இருவரில் ஒருவர் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது.

Raina-Uthappa-Cinamapettai.jpg
Raina-Uthappa-Cinamapettai.jpg

வேகப்பந்து வீச்சில் தீபக் சாகர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஓப்பனிங்கில் ரூத்ராஜ் மற்றும் உத்தப்பாவும், ஒன் டவுன் ரெய்னாவும் இறங்குவார் என்கிறார்கள். கடந்த சீசனில் சிஎஸ்கேவில் ஆடாத ரெய்னா, உத்தப்பா, மொயின் அலி ஆகிய மூன்று பேர் இந்த சீசனில் அணிக்குள் வருகிறார்கள்.

Imran-cinemapettai.jpg
Imran-cinemapettai.jpg

இதனால் இன்றைய சென்னை அணி முழு பலத்துடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.