நீங்கள் எல்லாம் கத்துக்குட்டிகள்.! தோனிக்கு முன்னரே ஹெலிகாப்டரை பறக்க விட்ட முன்னால் இந்திய கேப்டன்!

மகேந்திர சிங் தோனி ரிட்டையர்ட் ஆன பிறகும் கூட இன்று வரை பல பேர் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவருடைய கேப்டன்ஷிப் மட்டுமின்றி அவர் தனித்துவமான பேட்டிங் ஸ்டைலும் தான்.

“The untold Story” என்ற படத்தில் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தத்துரூபமாக காட்டப்பட்டிருக்கும். தோனி வாழ்க்கையில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்பதை அருமையாக சொல்லியிருப்பார்கள்.

அந்தப்படத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பற்றியும், அதை அவரின் நண்பர் மூலமாக கற்றுக் கொள்வதையும் காட்டியிருப்பார்கள். உடம்பை அலட்டாமல் கை மூட்டுகளால் மட்டுமே பேட்டை ஒரு சுற்று சுற்றி பந்தை விளாசுவது தான் இந்த ஷாட்டின் சிறப்பு.

டோனியை தொடர்ந்து ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் என பலரும் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பயிற்சி பெற்றனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியிருந்தாலும் அதை கிரிக்கெட் ஷாட் புக்கில் செதுக்கிய சிறப்பு தோனியையே சாரும்.

Sachin-Helicopter-Cinemapettai.jpg
Sachin-Helicopter-Cinemapettai.jpg

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இந்த ஷாட்டுக்கெல்லாம் நான்தான் குரு என்பது போல் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து காட்டியிருப்பார்.

Azhar1-Cinamapettai.jpg
Azhar1-Cinamapettai.jpg

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் லான்ஸ் குளூஸ்னர் வீசிய பந்தை அசால்டாக மணிக்கட்டின் உதவியுடன் ஹெலிகாப்டர் ஷாட்டை பறக்க விடுவார். அப்போதே அசாருதீன் ஹெலிகாப்டர் ஷாட் ஆடினாலும், தோனி அடித்த பின்பு தான் அந்த ஷாட் மிகவும் பேமஸ் ஆனது.

Azhar-Helicopter-Cinemapettai.jpg
Azhar-Helicopter-Cinemapettai.jpg

Next Story

- Advertisement -