தனுஷின் முதல் படத்தில் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என கேட்டவர்கள் மத்தியில் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாலிவுட், ஹாலிவுட் என இவரது வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனர்களாக திகழும் ருஸ்ஸோ பிரதர்ஸ் தி கிரே மேன் படத்தை இயக்கியுள்ளனர். இவர்கள் இயக்கிய அவெஞ்சர்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இவர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் தனுஷும் இணைந்து நடித்துள்ளார்.
நெட்ப்ளிக்ஸ் இணையதளம் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி இணையதளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தி கிரே மேன் படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா உடன் கலந்து கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனுஷ் தி கிரே மேன் படத்திற்காக வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 5 லட்சம் அமெரிக்க டாலர்களை இப்படத்திற்காக தனுஷ் வாங்கியுள்ளார்.
அதாவது இந்திய மதிப்பில்படி 3 கோடியே 99 லட்சம் ஆகும். ஆனால் தமிழ் படங்களுக்கு 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தனுஷ் ஹாலிவுட் படத்தில் இவ்வளவு குறைவாக வாங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தனுசுடன் நடித்த எவான்ஸ் 15 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பளமாக பெற்றுள்ளார்.
மேலும் ரியான் காஸ்லிங்கிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஹாலிவுட் வாய்ப்புக்காக தான் இவ்வாறு குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் ஹாலிவுட்டில் நிறைய படவாய்ப்புகள் தனுஷுக்கு வர வாய்ப்புள்ளது.