கேப்டன் மில்லரில் இருந்து வெளியே வந்த தனுஷ்.. திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்த வைரல் போட்டோ

Dhanush Recent Photo: தனுஷ் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் இப்போது பெரிதும் நம்பி இருக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் போன்ற பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த வருடம் இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியை வளர்த்திருந்தார்.

Also Read : ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்

அவருடைய இந்த நியூ லுக் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடித்திருந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் காட்சிகள் முடிந்த நிலையில் மொத்தமாக அந்த படத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். இப்போது அவரது புதிய தோற்றம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது ஜூன் மூன்றாம் தேதியான இன்று அதிகாலை தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தனுஷ் சாமி தரிசனம் பெற்றுள்ளார். மேலும் தனது மகன்களுடன் தனுஷ் மொட்டை அடித்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

Also Read : நடிகர்களுக்கு இணையாக ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய நடிகைகள்.. ஓவராக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார். இது அவருடைய ஐம்பதாவது படம். அதற்காக தான் தனுஷ் இப்போது மொட்டை அடித்துள்ளார் என்றும் இதே தோற்றத்தில் தான் படத்தில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் இதற்கான பூஜை போடப்படும்.

மேலும் கடந்த சில வருடங்களாக தனுஷுக்கு எந்த படமும் மிகப்பெரிய வெற்றி கொடுக்கவில்லை. ஆகையால் கேப்டன் மில்லர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் தனுஷ் இருக்கிறார். அதற்கான நேர்த்திக்கடனாக தான் தனுஷ் தனது முடியை காணிக்கை செலுத்தி உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் தனுஷ் மொட்டை அடித்து தரிசனம் செய்த  போட்டோ

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

Also Read : ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று அமைந்த 5 படங்கள்.. வேறொரு பரிமாணத்தில் கலக்கிய தனுஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்