இரட்டைக் குதிரை சவாரி செய்யும் தனுஷ்.. என்ன இருந்தாலும் மாப்பிளைக்கு இவளோ வெறி கூடாது

Actor Dhanush: இப்போ எல்லாம் தனுஷ பார்த்தா காதல் கொண்டேன் படத்துல திவ்யா திவ்யா டான்ஸ் ஆடனவரா இவரு என ஒரு செகண்டு தோணுது. கஷ்டப்பட்டு உழைச்சா கண்டிப்பா முன்னேறிடலாம் என்பதற்கு தனுஷோட வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. என்னதான் ஒரு பக்கம் அவருக்கு அதிர்ஷ்டம் என்று எல்லோரும் சொன்னாலும், உண்மையை சொல்லப்போனால் தனுஷ் சினிமாவை கத்துக்கிட்டார்.

ஹீரோவா ஜெயிச்சதுக்கு அப்புறம் இது மட்டும் நமக்கு போதும்னு அவர் நினைக்கல. சினிமாவுல எதெல்லாம் முயற்சி செய்து பார்க்கணும்னு நினைச்சாரோ அது எல்லாத்தையும் செஞ்சாரு. இதுல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா செஞ்ச எல்லாமே அவருக்கு வெற்றியா அமைஞ்சது தான்.

அவர் எழுதுகிற பாட்டு, பாடுற பாட்டு எல்லாமே ஹிட் ஆயிடும். தயாரிப்பாளரா ஒரு சில படங்களில் பெரிய வெற்றியையும் பார்த்தார். இயக்குனரா களம் இறங்கினார், அதுவும் சூப்பர் வெற்றி தான். அது மட்டுமில்லாமல் ஹாலிவுட், டோலிவுட் என எல்லா பக்கமும் ஜெயிச்சுக்கிட்டு இருக்கார்.

தனுஷ் இப்போ தன்னோட ஐம்பதாவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என எல்லோருக்கும் தெரியும். அது மட்டும் இல்லாமல் அவருடைய அக்கா பையனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இளையராஜாவோட பயோபிக் தனுஷ் எடுக்கப் போகிறார் என முதலில் செய்தி வந்த போது வதந்தியாக தான் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். ஆனா அதுவும் இப்போ உண்மையாகி விட்டது. இளையராஜா அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனுஷ் இப்படி செய்திருப்பது அவருக்கு ரொம்பவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

தனுஷ் பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்தி ஒன்று மனுஷன் கொஞ்சம் அகல கால் வைக்கிறாரோ என தோன்றும் அளவுக்கு இருக்கிறது. நம்ம மேல நமக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அதீத நம்பிக்கை தலைகனமா மாறிடக் கூடாது.

இரட்டைக் குதிரை சவாரி செய்யும் தனுஷ்

தனுசு இப்ப அத தான் செஞ்சுட்டு இருக்காரு. ஒரே நேரத்துல குபேரன் மற்றும் இளையராஜாவோட பயோபிக்கல ரெஸ்ட்டே இல்லாம நடிச்சிட்டு இருக்காரு. ஒரே மொட்ட கெட்டப்பில் ரெண்டு படத்தையும் முடிப்பது தான் அவருடைய பெரிய பிளான்.

தனுஷ் வேகமாய் இருக்கிறதை விட கொஞ்சம் விவேகமா யோசிக்க வேண்டியதும் அவசியம். சினிமாவில் இரட்டை குதிரை சவாரி என்பது எப்போதுமே கை கொடுக்காது. ஒரு சில நேரத்தில் காலை வாரிவிட்டு விடும். ஒருவேளை ரெண்டு படமே சூப்பர் ஹிட் அடித்து விட்டால் நமக்கும் சந்தோசம் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்