ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் மீது செம்ம காண்டில் தனுஷ்.. அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டதே என வருத்தம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது.

அதே போல் தன்னுடைய கடின உழைப்பால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். சமீபத்தில் தான் இவருடைய கர்ணன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்து அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் தனுஷுக்கும் ஜகமே தந்திரம் பட தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் படம் தான் ஜகமே தந்திரம்.

அதேபோல் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, ஒய் நாட் என்டர்டைன்மென்ட் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்து உள்ளனராம். இந்த படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதுதான் தனுஷின் ஆசையாம்.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் படத்தை நெட்ஃபிக்ஸ் தளத்திற்கு 45 கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாகவும், மார்ச் மாதம் இந்தப் படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

jagame-thandhiram-producer

இதனால் தான் தனுஷ் தயாரிப்பாளர் சசிகாந்த் மீது பெரும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்கு குரல் கொடுத்ததில் ஒருவர் தான் தனுஷ்.

இதனால் எப்படியாவது ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளருடன் தனுஷ் போராடி பார்த்தாராம். அந்த முயற்சி கைகூடாததால் பெரும் அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் இனிமேல் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பது சந்தேகம் தான் என்கின்றனர் சினிமா பிரபலங்கள்.