உண்மையிலேயே அவர் பெரிய மனுஷன்யா.. பிரபுதேவாவிற்கு வேறுமாதிரி தனுஷ் செய்த நன்றிக்கடன்

தனுஷ் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என ஒரு பிஸியான நடிகராக வலம் வருகிறார். தமிழிலும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முழுவதும் சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலக அளவில் பேமஸ் ஆனது. மேலும் இந்த பாடலில் தனுஷ், சாய்பல்லவியின் நடனம் குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்திருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபு தேவா தான் கோரியோகிராபி செய்ய வேண்டும் என படக்குழு விரும்பியுள்ளது.

ஆனால் அதற்கு பிரபுதேவா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்பு தனுஷ் நேரடியாகப் போய் பிரபுதேவாவிடம் கேட்டுக்கொண்டதால் உடனே இந்த பாடலுக்கு கோரியோகிராபி செய்து கொடுத்தார். பாடலும் வேற லெவல் ஹிட்டானது. இப்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ், பிரபுதேவாவுக்கு ஒரு உதவி செய்துள்ளார்.

தற்போது பிரபுதேவா ஜல்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தை குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாடல் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு அஸ்வின் விநாயகம் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடவேண்டும் என்று பிரபுதேவா கேட்டுக்கொண்டுள்ளார். தனுஷூம் பிரபுதேவாவுக்காக அந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தனுஷ் தான் பெற்ற நன்றிக்கடனை வேறுவிதமாக பிரபுதேவாவிற்கு செலுத்தியுள்ளார். தனுஷ் குரலில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதேபோல் ஜல்சா படத்திலும் தனுஷ் பாடிய பாடல் ரசிகர்களை கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.