அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் தான் இப்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஏனென்றால் டாப் நடிகர்கள் என்ற அந்தஸ்து உள்ளதால் அவர்களது ரசிகர்கள் படத்தை எப்படியும் வெற்றி அடைய செய்து விடுகிறார்கள். இதனால் போட்ட பட்ஜெட்டை விட படம் அதிகமாக வசூல் செய்து விடுகிறது.

ஆனால் தனுஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. திருச்சிற்றம்பலம் படம் மட்டும் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷின் வாத்தி படம் உருவாகியுள்ளது.

Also Read : பணத்தாசையால் கேரியரை தொலைக்கும் 3 டாப் ஹீரோக்கள்.. வாரிசு விஜய்யின் லிஸ்டில் இணைந்த தனுஷ்

வாத்தி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் சேர்ந்து லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் வெளியிடுகிறது.

இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியானது. இந்த படங்களுக்குப் பிறகு இப்போது பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அது தனுஷின் வாத்தி படம் தான். ஆகையால் முதல் நாளே வசூலை அள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தியேட்டரில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

Also Read : தனுஷ் இனிமேல் அக்கட தேசத்தில் படம் வெளியிடுவது சந்தேகம்.. வாத்தி பட பிரமோஷனில் ஏற்பட்ட சர்ச்சையான பேச்சு

விஜய்யின் லியோ படத்தை லலித் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்ற வருவதால் அங்கு இருந்து கொண்டு வாத்தி படத்தின் ரிலீஸ் வேலைகளை தயாரிப்பாளர் பார்த்து வருகிறாராம். ஆகையால் தனுஷுக்கு வாத்தி படம் வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தியேட்டரில் தனுஷ் படம் வெளியிடுவதால் படத்தின் வசூல் பெரிதாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வாத்தி படத்திற்கு போட்டியாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

Also Read : ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்

- Advertisement -