தனுஷின் தற்போதைய சொத்துமதிப்பு.. நாலு மாடி பங்களா மட்டும் இத்தனை கோடியா.!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

தனுஷ் 3 தேசிய விருது , 7 ஃபிலிம் ஃபேர் விருது, 9 விஜய் விருதுகளை பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு சோனம் கபூருடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தனுஷ் அறிமுகமானார். தனுஷின் மாத சம்பளம் 1 கோடி. அவரின் நிகர மதிப்பு 145 கோடி ஆகும். தற்போது தனுஷ் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 5 முதல் 6 படங்களில் கமிட்டாகியுள்ளார், அடுத்த மூன்று வருடங்களுக்கு செம பிசியான ஹீரோ தனுஷ் என்றே கூறலாம்.

தனுஷ் தற்போது ஆழ்வார்பேட்டையில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சமீபத்தில், தனுஷ் தனது குடும்பத்திற்கு புதிய குடியிருப்பு கட்டுவதற்காக போயஸ் கார்டனில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கினார். அந்த நிலம் தனுஷின் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகில் உள்ளது. ஆனால் தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தான் உள்ளது.

போயஸ் கார்டன் சென்னையில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். மேலும், இது தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வேதா இல்லம் உட்பட பிரபலமானவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் போன்ற சில நபர்கள் இருக்கும் இடமாகும்.

போயஸ் கார்டனில் தனுஷ் தனது கனவு இல்லத்தை 19,000 சதுர அடியில் நான்கு மாடிகள் உள்ள பங்களா கட்டுவதற்கு 150 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இந்த பங்களாவில் மொத்த மதிப்பு 175 முதல் 200 கோடி வரை இருக்கலாம்.  தற்போது வரை தனுஷ் சொத்து மதிப்பு 500 கோடியை தாண்டும் என்று கோலிவுட் வட்டராம் தெரிகின்றன.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் முதலீடு செய்கிறார். தனுஷ் கார்கள் சேகரிப்பில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் அடங்கும். அத்துடன் ஆடி ஏ8, ஃபோர்டு முஸ்டாங், பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், ஜாகுவார் XE ஆகிய கார்களை வைத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்