ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் அதிகமாக சம்பாதித்தாலும் மற்ற நடிகர்களை பார்த்து அவர்களைப் போல் நாமும் வரவேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு பல விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி ஏதாவது அவர்களிடம் கேட்டால் எங்களுக்குள் போட்டி பொறாமை கிடையாது. நாங்கள் நண்பர்கள் தான் என்று தன்னடக்கத்துடன் பேசுவார்கள்.

இப்படிப்பட்ட சிச்சுவேஷன்ல தான் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இந்த வருடம் தீபாவளிக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தனுஷ் ஏற்கனவே முடிவு செய்து இதைப்பற்றி அறிவிப்புகளும் வெளியிட்டு இருக்கிறார். இதை தெரிந்த சிவகார்த்திகேயன் அவர் நடித்திருக்கும் அயலான் படத்தையும் வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

Also read: ஒரு கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன்.. கமலை வைத்து கல்லா கட்ட திட்டம்

அடுத்ததாக சிவகார்த்திகேயன் செய்யும் இந்த செயலை பார்க்கும்பொழுது கொஞ்சம் ஓவராக தான் போகிறாரோ என்று தெரிகிறது. தனுஷ் வைத்திருக்கும் கார் நம்பர் 0010. இதே நம்பர் போலவே சிவகார்த்திகேயன் வாங்கும் கார்களிலும் இருக்க வேண்டும் என்று நினைத்து அவர் வாங்கும் அனைத்து கார்களுக்கும் இதே நம்பரை வாங்கி வைத்து தனுஷை வெறுப்பேற்றி வருகிறாராம்.

மற்றும் தனுஷின் அலுவலகத்திற்கு எதிராகவே சிவகார்த்திகேயனும் அலுவலகத்தை அமைத்திருக்கிறார். இவர் இப்படி செய்வது வெளியில் அப்பட்டமாகவே தெரிகிறது. அதனால் சினிமா பிரபலங்கள் பலரும் ஏன் வேண்டுமென்றே சிவகார்த்திகேயன் இந்த மாதிரி விஷயங்களை செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்கள்.

Also read: லியோ படப்பிடிப்புக்கு சைலண்டாக வரும் தனுஷ்.. ஒருவேளை அந்த கதாபாத்திரம் போல் இருக்குமா?

ஆனாலும் தனுஷை ஏன் இந்த அளவிற்கு வெறுப்பேற்றி பார்க்கிறார் என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் ஆரம்பத்தில் சினிமாவிற்கு நுழைவதற்கு தனுஷ் ஒரு வழிகாட்டுதலாக இருந்தவர் தான். அவரிடமே ஏன் இந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஆனாலும் சிவகார்த்திகேயன் இந்த மாதிரி ஒரு கேரக்டர் உடையவர் அல்ல. அப்படி இருக்கையில் தனுஷை மட்டும் ஏன் சீண்டிப் பார்த்து வருகிறார்.

தனுஷும் இவர் செய்வதை சைலண்டாக இருந்து பொறுத்து பொறுத்து பார்த்து வருகிறார். ஆனாலும், தான் வளர்த்து விட்ட பையன் இப்படி செய்வது அவருக்கு கொஞ்சம் கடுப்பாகத் தான் இருக்கிறது. இதற்கு அடுத்து இவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் தனுஷ்க்கு எதிராக யாராவது போட்டி போட முடியுமா. ஆனாலும் சிவகார்த்திகேயன் கொஞ்சம் ஓவராகத்தான் வெறுப்பேற்றி வருகிறார்.

Also read: காணாமல் போன தனுஷ் பட நடிகை.. மோசமான கதாபாத்திரத்தால் சிம்பு படத்தோடு முடிந்த கேரியர்

- Advertisement -

Trending News