எவ்வளவு பெரிய கொம்பனாலும் இதை பண்ண முடியாது.. துணிச்சலுடன் பதிலளித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், மாறன், ஹாலிவுட்டில்  தி கிரே மேன் மற்றும் பாலிவுட்டில் அட் ராங்கி ரே எனும் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தான் கோலிவுட் பக்கம் திருப்பியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் தனுஷிடம் சினிமா பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டதற்கு சாமர்த்தியமாக பதிலளித்த தனுஷ் கதை எப்படி தேர்வு செய்வது என்ற கேள்விக்கு மட்டும் சற்று வித்தியாசமாக பதிலளித்தார்.

அதாவது நான் பலமுறை கதைகள் கேட்டு ஆச்சரியப்பட்டு உள்ளேன். அப்போதெல்லாம் இந்த படம் கண்டிப்பாக பெரிய அளவில் ஹிட் ஆகிவிடும் என நினைத்து தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளேன். ஆனால் படம் வெளிவந்த பிறகு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது.

அதேபோல் ஏன்டா இந்த படத்தில் நடித்தேன் என சில நேரங்களில் வருத்தப்பட்டு உள்ளேன்.  இப்படம் வெளிவந்த பிறகு பார்த்தால் அந்தப் படம்தான் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். இதனால் சினிமாவில் கதையை கேட்டுவிட்டு படம் ஹிட்டாகிவிடும், இந்த படம் ஓடாது என்றெல்லாம் முடிவு செய்ய முடியாது என கூறினார்.

dhanush
dhanush

எந்த மாதிரி படம் நடிக்க வேண்டும் என்பதை இன்றுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் நடிப்பில் உழைப்பு போட்டால் சிலநேரம் அது நமக்கு ஹிட் கொடுக்கும், சில நேரம் நமக்கு தோல்வி கொடுக்கும். ஆனால் யாராலயும் இந்த படம் ஹிட்டடிக்கும், இந்த படம் தோல்வி அடையும் என்பதை முடிவு செய்ய முடியாது என கூறினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்