அஜித்தை பார்த்து கத்துக்கணும் தனுஷ்.. ஆடிப்போன கேப்டன் மில்லர் படக்குழு

தனுஷ் முன்பு இருந்தது போல இப்போது இல்லை என்றும் அவருக்குள் மாற்றங்கள் வந்துள்ளதாக சிலர் கூறியிருந்தனர். ஆனால் இவையெல்லாம் வதந்தியாக இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு இப்போது ஆச்சரியமான விஷயம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இப்படம் ஹிஸ்டாரிக்கல் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தோல்வி படங்களையே தனுஷ் கொடுத்து வருவதால் கேப்டன் மில்லர் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

Also Read : தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்

ஆனால் கேப்டன் மில்லர் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நிலையில் பாதியில் யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் திரும்பி சென்னை வந்து விட்டாராம். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் படக்குழு குழம்பிப் போய் இருந்துள்ளது. அதன் பிறகு தான் என்ன விஷயம் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது தனுசுக்காக கேப்டன் மில்லர் படத்தில் ஒரு கேரவன் கொடுத்துள்ளார்கள். மேலும் தனுஷ் கேரவனில் இருந்து 100 அடி தூரத்தில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். ஆகையால் அவரை சூட்டிங் அழைத்துச் செல்ல டொயோட்டா இனோவா கார் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

இதை பார்த்து தனுஷ் கடுப்பாகி தனக்கு ஆடி கார் தான் அனுப்பி இருக்க வேண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இருந்து கோபப்பட்டு சென்னை திரும்பி விட்டாராம். இந்த விஷயத்துக்கெல்லாம் தனுஷ் கோபப்படுவாரா என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அஜித்தை பார்த்து கத்துக்கோங்க என தனுஷுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் அஜித் பல நாட்கள் சூட்டிங் நடக்கும் இடத்திற்கு பைக்கிலேயே சென்றிருக்கிறாராம். மேலும் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6 மணிக்கே ரெடியாக இருப்பாராம். தன்னால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யாரும் காத்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் படைத்தவராக அஜித் தற்போது வரை இருந்து வருகிறார்.

Also Read : ராட்சசன் ஆக வந்த 5 பெஸ்ட் சைக்கோ கேரக்டர்கள்.. ஹீரோவை மறந்து கொடூரமாக நடித்த தனுஷ்

- Advertisement -