ஓவரா பேசிய சிம்பு, நாசுக்காக பதிலடி கொடுத்த தனுஷ்! உள்ளுக்குள்ள இன்னும் பகை இருக்கும் போலயே!

ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் போட்டியாக பார்க்கப்படும் நடிகர்கள் என்றால் அது தனுஷ் மற்றும் சிம்பு தான். தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளார். ஆனால் சிம்பு தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தடம் மாறி விட்டார்.

போனது போகட்டும், இனி ஆகவேண்டியதை பார்ப்போம் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சிம்பு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

என்னதான் நண்பர்கள் என மேடைக்கு மேடை சொல்லிக்கொண்டாலும் சிம்பு தனுஷ் ஆகியோருக்கு இடையே பழைய பஞ்சாயத்து இருந்து வருவது அவ்வப்போது வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தில் தனுஷை சீண்டும் விதத்தில் சிம்பு, நீ அழிக்க வந்த அசுரன் நா, நான் காக்க வந்த ஈஸ்வரன் என்ற தேவையே இல்லாமல் பஞ்ச் பேசி இருப்பார். அந்தப் படத்திற்கும் அந்த டயலாக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் தனுஷை வம்புக்கு விதமாக பேசியிருந்தார்.

ஆனால் தனுஷ் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததாக அனைவரும் கூறினர். ஆனால் சத்தமே இல்லாமல் சிம்புவுக்கு தன்னுடைய டுவிட்டர் மூலம் செம பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். இதுவரை தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் என்ற பெயருக்கு பக்கத்தில் நடிகர் என்ற அடைமொழி இருந்தது.

ஆனால் சிம்பு தேவை இல்லாமல் பேசியதால் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அசுரன் நடிகர் என மாற்றியுள்ளார். இதன் மூலம் இருவருக்குள்ளும் இன்னும் பகை இருந்துகொண்டுதான் இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிளப்பி விட்டு விட்டனர்.

dhanush-twitter
dhanush-twitter
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்