தனுஷ் வேண்டா சொன்ன படம்.. கடைசியில் விஜய் ஆண்டனிக்கு மாஸ் படமாக அமைந்த கதை

தமிழ் சினிமாவில் நிறைய முன்னணி நடிகர்களுக்கு வரும் படங்களை அவர்கள் நிராகரித்து அதே படங்கள் வேறு நடிகர்களுக்கு நல்ல அடையாளமாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தனுஷ் நிராகரித்த படம் ஒன்று விஜய் ஆண்டனிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது ஹிந்தி, ஹாலிவுட் என மிரட்ட ஆரம்பித்து விட்டார்.

அதுவும் ஹாலிவுட்டில் சும்மா இல்ல. அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் படத்தில் நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் தனுஷ் நடித்து வருகிறார், அடுத்த மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் தொடங்க உள்ளது.

தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்த பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நான் படத்தின் கதையை கேட்டாராம். நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் தனுஷை சந்தித்து நான் கதை கூறும் போது சரிவர சொல்லவில்லையாம்.

இதனால் இரண்டு வருடம் கழித்து சொல்கிறேன் என்று சொன்ன தனுஷ் நான் படத்தை ஞாபகம் வைத்து அந்த படத்தில் தான் நடித்தால் ஏன் சரி வராது என்ற காரணத்தையும் கூறி அந்த படத்தை நிராகரித்தாராம். அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் நான் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம்தான் நடிகராக விஜய் ஆண்டனியின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

naan-movie-vijay-antony
naan-movie-vijay-antony
- Advertisement -