தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

தனுஷ் ஆரம்ப நாட்களில் மிகவும் துறுதுறுவென இருக்கும் பல கேரக்டர்களில் நடித்து இருக்கிறார். அந்த நாட்களில் இருந்தே அவருடைய பரிமாணம் படத்திற்கு படம் மாறிக்கொண்டே இருக்கிறது. பிரகாஷ் ராஜ் விஜய், விக்ரம் போன்றோருக்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்து வரும் நாயகனான தனுஷுக்கும் வில்லனாக நடித்தார். அதில் ஆரம்பித்த இவர்களது சினிமா பயணம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

திருவிளையாடல் ஆரம்பம்: இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலா கீதா தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தில் தனுஷ், ஸ்ரேயா, கருணாஸ், கிரேஸ் கருணாஸ், மௌலி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பணக்காரர் பிரகாஷ் ராஜின் தங்கை ஸ்ரேயாவை காதலிக்கும் சாதாரண குடும்பத்து இளைஞனாக வருவார் தனுஷ். ரஜினி-சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் படத்தில் வரும் ‘என்னம்மா கண்ணு’ பாடலை இந்த படத்தில் தனுஷ்-பிரகாஷ் ராஜ் ரீமேக் செய்து இருந்தனர்.

Also read: சன் டிவியை பலி வாங்கிய தனுஷ்.. நீங்க கூப்பிடற இடத்துக்கு எல்லாம் மணியாட்ட முடியாது!

வேங்கை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேங்கை. இந்த படத்தில் தமன்னா, கஞ்சா கருப்பு, ராஜ்கிரண், ஊர்வசி நடித்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். வழக்கமான ஹரியின் படம், மசாலாக்கள் நிறைந்ததாக இந்த படம் இருந்தது.

Also read: மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்

அசுரன்: பூமணியின் வெக்கை என்னும் புதின கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. தனுஷ், மஞ்சு வாரியார், பசுபதி, கென் கருணாஸ். தீஜே அருணாச்சலம், அம்மு அபிராமி நடித்த திரைப்படம். இந்த படம் தேசிய விருதை பெற்றது. இந்த படத்தில் பிரகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also read: நடிப்பில் மிரள விட்ட தனுஷ்.. பூரித்துப் போன தயாரிப்பாளர்

திருச்சிற்றம்பலம்: யாரடி நீ மோகினி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ்-மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவான படம். பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நடித்திருந்தனர். 16 வருடங்களுக்கு முன் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இவர்களுடைய அப்பா மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை