பூனம் பஜ்வாவையும் விட்டுவைக்காத தனுஷ்.. பொல்லாதவன் படத்திற்காக நடந்த போட்டோஷூட் புகைப்படங்கள்

திரைப்படங்களில் வரும் ஒரு சில விஷயங்கள் அல்லது பொருட்கள் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிடும். நடிகர்களின் ஒருசில மேனரிசம் அவர்கள் பயன்படுத்தும் பைக்கள் போன்றவை பிரபலம் ஆவது வழக்கமே.

பொல்லாதவன் திரைப்படத்தில் கதையின் முக்கிய பங்காக தனுஷ் பயன்படுத்திய பல்சர் பைக் அதிக கிரேசை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இயக்குனர் வெற்றிமாறன் முதலில் அப்பாச்சி பைக்கை தேர்வு செய்தாராம். பிறகுதான் பல்சர் பைக்கிற்க்கு மாரினாராம்.

2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பொல்லாதவன். தனுஷ்,  திவ்யா, கருணாஸ், சந்தானம், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருந்தது. மேலும் 10 கோடி வசூல் செய்தது பொல்லாதவன் திரைப்படம். விஜய் அவார்ட்ஸ் பொல்லாதவன் படத்திற்கு 4 விருதுகள் வழங்கியது.

இத்திரைப்படத்தில் ஹீரோயின் ரம்யாவிற்கு முன்பு இரண்டு நடிகைகளுடன் போட்டோஷூட் நடந்திருக்கிறது. காஜல் அகர்வால் மற்றும் பூனம் பஜ்வா ஆகிய இருவருமே தனுஷுடன் போட்டோஷூட் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு அந்த போட்டோ ஷூட் டுகளில் திருப்தி இல்லாததால் ரம்யா அவர்களை தேர்வு செய்தாராம்.

தனுஷ் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார் இருப்பினும் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் ,வடசென்னை போன்ற படங்கள் வெற்றியையே பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-1
dhanush-1
dhanush
dhanush
- Advertisement -