அந்த மனுஷன் ஒன்னும் என்னை வளர்த்து விடலை.. திமிராய் பதில் கூறிய தனுஷ்

சமீபகாலமாக இணையத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக இருப்பது ஐஸ்வர்யா, தனுஷ் விவாகரத்து தான். இவர்கள் இருவரும் 18 வருட கால திருமண வாழ்க்கையில் இருந்து மனம் ஒத்து பிரிய போவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணம் என்ன என பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது.

இதனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே பல்வேறு பிரச்சனைகளையும், கிசுகிசுக்களையும் சந்தித்து வருகிறார்கள். தற்போது தனுஷ் இதை மறப்பதற்காக முழுவதும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் மருமகன் என்பதால் தான் நீங்கள் சினிமாவில் வளர்ந்ததாக பலரும் கூறுகின்றனர்.

தனுஷ் தன்னுடைய தந்தை கஸ்தூரிராஜா  இயக்கத்தில் முதன்முறையாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இதைதொடர்ந்த அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்களில் நடித்து ஒரு நிலையான கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார். செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ரஜினியால் தான் தனுஷ் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என பலரும் கூறி வருகையில் அதற்கு பதில் அளித்த தனுஷ், நான் சினிமாவுக்கு வந்தது என் அப்பா, அண்ணன் மூலமாகத்தான். அவர்கள்தான் ஆரம்பகாலத்தில் என்னை வளர்த்து விட்டனர்.

அதன் பிறகு என்னுடைய திறமை மட்டுமே நான் சினிமாவில் வளர்ந்ததற்கு முக்கிய காரணம். ரஜினியின் மருமகன் என்பது ஒரு அந்தஸ்து கொடுத்ததை தவிர என்னை வளர்த்து விடவில்லை என தனுஷ் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவால் தனுஷ் தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.

ரஜினியின் பொல்லாதவன், படிக்காதவன், தங்கமகன் ஆகிய படங்களின் டைட்டில்களை சென்டிமென்டாக தனுஷ் தன்னுடைய படங்களில் வைத்திருந்தார். இதனால் தனுஷ் வளர்ச்சிக்கு ரஜினி முக்கிய காரணம் என பலரும் சொல்லுகிறார்கள் போல.