எடுக்கவே வாய்ப்பில்லாத தனுஷின் 3 பார்ட் 2 மூவிஸ்.. கேப்டன் மில்லருக்கு பிறகு போடும் பலே திட்டம்

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் வார்த்தை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாக கேப்டன் மில்லர் இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தென்காசி மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2. இந்த படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தான் தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

Also Read:முன்னாள் மனைவிக்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. மும்பையில் தாடி, மீசையுடன் சுற்றி திரிய இது தான் காரணமாம்!

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தைப் பற்றி நடிகர் தனுஷ் அல்லது படத்தின் இயக்குனர் செல்வராகவன் இதுவரை வாயை திறக்கவே இல்லை. அதற்கு மிக முக்கிய காரணம் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் மிகப்பெரிய பொருளாதார தோல்வியை சந்தித்தது தான். இதனால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்க கண்டிப்பாக வாய்ப்பில்லை. இயக்குனர் செல்வராகவனும் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் பயங்கர பிசியாகிவிட்டார்.

அதேபோன்றுதான் புதுப்பேட்டை திரைப்படமும். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், பொருளாதார ரீதியாக மண்ணை கவியது. இருந்தாலும் ரசிகர்களின் ஆறுதலுக்காக இயக்குனர் செல்வராகவனும், நடிகர் தனுஷ் அவ்வப்போது பொது மேடைகளில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாகும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

Also Read:தான் யார் என்பதை மறந்து தனுஷுக்கு சோப் போடும் பாரதிராஜா.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்!

இதற்கிடையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வேறு தகவல்கள் வெளியானது. இந்த படத்தை பொருத்தவரைக்கும் அப்போதைய இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதே தவிர, வசூல் ரீதியாக பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை. தனுஷ் தற்போது உச்ச ஹீரோவாக இருக்கும் நேரத்தில் இது போன்ற கதைகளில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேட்டிகளில் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என ரசிகர்களை உற்சாகப்படுத்த தனுஷ் சொல்லிக் கொண்டாலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை பக்காவாக திட்டம் போட்டு விட்டார். கேப்டன் மில்லர் முடித்த கையோடு பாலிவுட்டில் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதற்கான வேலைகள் தற்போது ஆரம்பித்து இருக்கிறது.

Also Read:அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்