எக்ஸ் மாமனாரால் விலகி இருந்த தனுஷ்.. 4 வருடம் கழித்து சுள்ளான் சூடாகி எடுத்த முடிவு

ஹாலிவுட் பாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தை முதன்முதலாக தனுஷ் தயாரித்து வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். மேலும் தனுஷ் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 140 கோடி பட்ஜெட்டில் தயாரித்த காலா படம் எதிர்பார்த்த அளவு லாபம்கொடுக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்திற்கு பிறகு படங்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டார்.

இப்பொழுது தனுஷ் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் ஆரம்பித்து படங்களை தயாரிக்க இருக்கிறார். இயக்குனர் இலனின் கதை அவருக்கு ரொம்ப பிடித்து போனதால் இலனை அப்படியே வளைத்துப் போட்டு விட்டார். இப்போது தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.

இயக்குனர் இலன் தனுசை வைத்து இயக்கப் போகும் கதை அருமையாக இருந்தும் பட்ஜெட் காரணமாக அதை நிராகரித்தது சத்யஜோதி பிலிம்ஸ். படத்திற்கு பட்ஜெட் 35 கோடிகள். தனுஷ் நடிக்க 30 கோடி, புரமோஷனுக்கு 5 கோடி என பட்ஜெட் எகிறியது. இதனால் சத்யஜோதி வேண்டாம் என மறுத்து விட்டது.

ஆகையால் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கைநழுவி விடக் கூடாது என்பதால், இயக்குனர் இலன் தனுசை வைத்து இயக்கப் போகும் படத்தை தானே தயாரித்து ஹிட் கொடுக்கும் முடிவில் தனுஷ் இருக்கிறார். மாமனாரால் நஷ்டப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை ஓரம் கட்டிய தனுஷ், மீண்டும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பு பணியை துவங்கி இருக்கிறார்.

மேலும் தனுஷுக்கு கர்ணன் படத்திற்குப் பிறகு வெளியான ஒரு சில படங்கள் தோல்வியை தந்ததால் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறமொழி படங்களை தவிர்த்து, தற்போது தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -