போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடிகளா? பிரமாண்டமா இருக்கும் போலயே!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார். தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜகமே தந்திரம், கர்ணன் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. தனுஷ் சமீபகாலமாக தன்னுடைய சினிமா கேரியரில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளார்.

வேறுவேறு தயாரிப்பாளருக்கு ஒவ்வொரு படமாக செய்வதை விட, ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ந்து மூன்று நான்கு படங்கள் செய்யலாம் என முடிவெடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து தலா மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த வகையில் வந்த அட்வான்ஸ் பணத்தைக் கொண்டு தற்போது தனது மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் சமீபத்தில் புதிய வீடு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பட்ஜெட் பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கிட்டதட்ட தனுஷ் அந்த வீட்டை 80 கோடி பட்ஜெட்டில் கட்டி வருகிறாராம். மேலும் அந்த வீட்டில் இல்லாத வசதிகளே கிடையாதாம்.

dhanush-cinemapettai-01
dhanush-cinemapettai-01

இன்றைய மாடர்ன் உலகத்தில் ஒரு வீட்டில் என்னென்ன ஆடம்பரமான பொருள்கள் இருக்க வேண்டுமோ அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம். தனுஷின் இந்த வீட்டுவேலை மட்டுமே கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் நடைபெற உள்ளதாம்.

தனுசை போலவே விஜய் மற்றும் அஜீத் போன்றோரும் சமீபகாலமாக தங்களுடைய சம்பளத்தை வைத்து புதிதாக பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -