மாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்படி எடுங்க என இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனுஷ் பட இயக்குனர் ஐடியா கொடுத்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த படங்களிலேயே இதுவரை மாஸ்டர் படம் போல் எந்த படமும் குறித்த ரிலீஸ் தேதியை தாண்டி இவ்வளவு நாட்கள் இழுத்ததில்லை. எல்லாம் நன்மைக்கே என்பதை போல கடந்த பொங்கலுக்கு வெளியானது மாஸ்டர்.

போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் சோலோவாக மாஸ்டர் படம் வசூலை அள்ளி தியேட்டர்காரர்கள் நெஞ்சில் பாலை வார்த்தது. குரானா சூழ்நிலையிலும் படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் மற்ற மொழி நடிகர்கள் கூட விஜய்யின் மாஸ்டர் பட வரவேற்பை பார்த்து மிரண்டு போனார்கள் என்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தான் தனுஷ் பட இயக்குனர் கார்த்திக் நரேன் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார். தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் D43 பட வேலைகளில் பிசியாக இருந்ததால் சமீபத்தில் கார்த்திக் நரேன் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.

dhanush-karthiknaren-D43
dhanush-karthiknaren-D43

இந்நிலையில் மாஸ்டர் படத்தைப் பற்றியும் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்தைப் பற்றியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் JD கதாபாத்திரம் எதற்காக முழுநேர குடிகாரராக மாறினார் என்பதை வைத்து மாஸ்டர் இரண்டாம் பாகம் எடுத்தால் சூப்பராக இருக்கும் என கார்த்திக் நரேன் லோகேஷ் கனகராஜுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய் தன்னுடைய ப்ரொபசர் இழப்பை தாங்க முடியாமல் தான் குடிக்கு அடிமையானதாக ஒரு பிம்பத்தை காட்டியிருப்பார்கள். ஆனால் அதில் ஏதேனும் ட்விஸ்ட் வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் 2 படத்தில் உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -