எல்லாமே அட்டு பிளாப், நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல.. படுதோல்வியை சந்திக்கும் தனுஷ் பட நடிகை

சின்னத்திரையில் இருந்து வெள்ளதிரைக்கு முன்னேறிய நடிகைகளின் இவரும் ஒருவர். என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறக்கூடிய இவருடைய நடிப்பிற்காக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல கோடிகளில் சம்பளம் கேட்கும் நடிகைகளின் மத்தியில் இவர் சில லட்சங்களை கொடுத்தாலும் நடிக்க ஒத்துக் கொள்வார்.

இவ்வாறு நடிப்புத் திறமையும் மிகக் குறைந்த சம்பளமும் வாங்குவதால் ரிலீஸ் ஆகும் படங்களில் மாதத்திற்கு ஒரு படம் இவருடையதாக இருக்கிறது, இருந்தாலும் அவர் நடிக்கும் படங்களை எல்லாம் தியேட்டருக்கு வந்து பார்க்க முடியாது. அதற்கெல்லாம் அவர் ஒர்த் இல்லை என்று ரசிகர்கள் முடிவு கட்டிவிட்டனர்.

Also Read: சூப்பர் ஹிட் கொடுத்தும் கெரகம் யாரை விட்டுச்சு.. விஷ்ணு விஷாலுக்கு ஆரம்பித்த ஏழரை

டாப் நடிகர்களான தனுஷின் வடசென்னை, விக்ரமுடன் சாமி 2 போற்ற படங்களில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுடன் தங்கையாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு டாப் ஹீரோவோடனும் அவர் சேர்ந்து நடிக்காமல், கதாநாயகியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பேசக்கூடிய மிகக் குறைந்த பட்ஜெட் படங்களை தேடித்தேடி வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் வெளியான பர்ஹானா திரைப்படம் வெளியாகி அட்டு ஃபிளாப் ஆனது மட்டுமின்றி, இந்த படத்திற்கு திரையரங்குகளில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது.

Also Read: உயிர் பயத்தைக் காட்டிய ஃபர்ஹானா.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த நிலைமையா!

ஆனால் நடிப்பே சுத்தமாக வராத நடிகைகள் எல்லாம் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பும், பல கோடி சம்பளமும் வாங்கி வரும் நிலையில், தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை என்ன சக நடிகைகளின் மீது பொறாமைப்படுகிறார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றிலும் வெளிப்படுத்தி வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டார்.

ஒருவேளை சர்ச்சையில் சிக்கினால் தான் சக்ஸஸ் அடைய முடியும் என்று நினைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் சக்ஸஸ் ஆகிறாரோ இல்லையோ ரசிகர்களிடம் அவநம்பிக்கையை மட்டும் சம்பாதித்துக் கொண்டார். இவரை ஒரு ஹீரோயின் மெட்டீரியல் ஆகவே பார்க்கவில்லை.

Also Read: எல்லா விஷயத்திற்கும் மூக்க நுழைக்கும் 6 நடிகர்கள்.. 20 பேர் பலியாகியும் வாயைத் திறக்கவில்லை ஏன் தெரியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்