முதல் முறையாக கதை கேட்காமல் ஓகே சொன்ன தனுஷ்.. காரணம் அந்த இயக்குனரோட பிரம்மாண்ட வெற்றி தான்

நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளார். இதில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி வரும் இப்படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மேலும் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் சி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம், உலகநாயகன் கமல் நடித்த அன்பே சிவம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படம் வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

sundarc
sundarc

மேலும் இதுவரை சுந்தர் சி நடிகர் தனுஷிடம் படத்தின் முழு கதையை கூறவே இல்லையாம். தனுஷ் எவ்வளவு பெரிய வெற்றி இயக்குனராக இருந்தாலும் முழு கதையை கேட்ட பின்னரே ஒகே சொல்லுவாராம். ஆனால் சுந்தர் சி மீது உள்ள நம்பிக்கையால் கதை கேட்காமலே ஒகே சொல்லியுள்ளார். தனுஷ் மாமனாரான ரஜினிக்கு அருணச்சாலம் படம் வெற்றி படமாக அமைந்தது போல தனுஷுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்