கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா பார்த்திபன் ரீமாசென் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக், இரண்டாம் பாகத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.
ஏனென்றால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பது உறுதியானது போலவே கார்த்திக்கை பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/AO2-cinemapettai.jpg)
எனவே இந்தப்படத்தின் முன் தயாரிப்பு பணிக்கு மட்டும் ஒரு வருடம் தேவைப்படுவதால் 2024 ஆம் ஆண்டு படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கார்த்திக் இல்லாமல் தனுசை மட்டும் வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் எடுத்து முடித்துவிடுவாரோ? என்ற சந்தேகமும் ரசிகர்களின் மத்தியில் தொடங்கிவிட்டது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதியாக கார்த்தி, சோழமன்னனின் பையனை தூக்கிக்கொண்டு செல்வது போன்ற காட்சி அமைத்து அதில் சோழனின் பயணம் தொடரும் என குறிப்பிட்டிருந்தனர். தற்போது அந்த சிறு வயது பையனாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க இருப்பது தனுஷ் தான் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் செல்வராகவனின் கதைக்களத்தை யாராலும் யோகிக்க முடியாது எனபது தான் உண்மை.