திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கேப்டன் மில்லர் யார் தெரியுமா.? பல அவதாரம் எடுக்க போகும் தனுஷ்

தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி, தி கிரேட் மேன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தனுஷ் கோலிவுட் சினிமாவைத் தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்தும் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படம் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நடந்த கதைக்களமாம்.

அதாவது 1930 இருந்த 1940 உள்ளன கதைகளம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கேப்டன் மில்லர் படத்தின் கதையை எழுதும்போது பாதி கதை எழுதிய பின்னர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு தனுஷ் சரியாக இருப்பார் என்று எண்ணியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் மில்லர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தவிர மேலும் இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். தனுஷ் கொடி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இதுவரை தனுஷ் 3 கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. முதல் முறையாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் மூன்று வேடத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தனுஷின் திரைவாழ்க்கையில் இப்படமும் மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கேப்டன் மில்லர் படம் தமிழ் மொழியில் மட்டும் எடுக்கப்பட உள்ளது. கேஜிஎஃப், புஷ்பா போன்ற அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் தன்மை இப்படத்திற்கு உண்டு என இயக்குனர் கூறியுள்ளார். இதனால் கேப்டன் மில்லர் படம் தமிழ் மொழியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டஃப் செய்யப்பட்ட வெளியாகயுள்ளது.

- Advertisement -

Trending News