மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்கணும்.. அப்செட்டில் இயக்குனர்களை படாதபாடு படுத்தும் தனுஷ்

தனுஷுக்கு சொந்த வாழ்க்கையில் தான் ஏகப்பட்ட பிரச்சனை என்றால் திரை வாழ்க்கையிலும் அதற்கு மேல் உள்ளது. என்னதான் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட் என்று சென்றாலும் தமிழில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் படங்கள் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இதை தொடர்ந்த அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

அருண் மாதேஸ்வரன் தமிழில் ராக்கி மற்றும் சாணி காகிதம் படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் இப்படம் திரையரங்கு வெளியீட்டுக்கு உருவாங்குவதாக கூறப்படுகிறது.

ஆனால் தனுஷ் தற்போது தன்னை நாடிவரும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து வருகிறாராம். அதாவது படத்தின் முழு ஸ்கிரிப்டையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அதை இரண்டு அல்லது மூன்று முறை படித்துவிட்டு பதில் சொல்கிறேன் என கறாராக கூறிவருகிறாராம்.

இதனால் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருந்த அருண் மாதேஸ்வரன், தனுஷ் படம் தற்போது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாம். ஏனென்றால் அருள் மாதேஸ்வரன் இன்னும் முழு ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணவில்லையாம். இதனால் தனுஷ் தொடர்ந்து அருள் மாதேஸ்வரனுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.

இதனால் படம் தொடங்குவதற்கு இன்னும் தாமதமாகும் என கூறப்படுகிறது. அசுரன் படத்தைப் போல தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் இவ்வாறு இயக்குனர்களை படாதபாடு படுத்தி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்