ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெயிலரை விட 10 மடங்கு பயங்கரமான கேப்டன் மில்லர்.. தனுஷை கதறவிட்ட சென்சார் போர்டு

Captain Miller-Dhanush: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வசூல் செய்யாத அளவுக்கு ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது. ஆனால் சமீப காலமாக படங்களில் அதிகம் வன்முறை காட்சிகள் இடம் பெற்று வருகிறது.

அந்த வகையில் ஜெயிலர் படத்திலும் ரசிகர்களை அச்சுறுத்தும் படியான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்திலும் பயங்கரமான வன்முறை காட்சி இடம் பெற்றிருப்பது அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியான போது தெரிய வந்திருக்கிறது. இப்போது தனுஷின் படத்திலும் அதே நிலைமை தான்.

Also Read : நேரம் பார்த்து சீண்டிப் பார்க்கும் சன் பிக்சர்ஸ் மாறன்.. ஜெயிலர் வீடியோ வெளியிட்டு பின் டெலிட் செய்த சம்பவம்

அதாவது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜெயிலர் படத்தை விட பத்து மடங்கு அதிகமாக சண்டை மற்றும் இரத்தக் களரியான காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதாம்.

மேலும் படத்தின் மைய கதையும் மிக மோசமாக அமைந்திருக்கிறது. இதனால் சென்சார் போர்டு பல காட்சிகளை கத்திரித்துள்ளதாம். இப்போது இதற்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். படத்திற்கு முக்கியமான காட்சிகள் மிகவும் வன்முறையுடன் இருப்பதால் அவற்றை நீக்க சொல்லி உள்ளனர்.

Also Read : ஷூட்டிங்கில் ஹீரோ கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிய தனுஷ் பட தாய்க்கிழவி

இதனால் தனுஷ் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். ஏனென்றால் சமீபகாலமாக அவரது நடிப்பில் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் கேப்டன் மில்லர் படத்திற்காக மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறார். ஆனால் இப்போது சென்சார் போடால் தனுஷ் தலைவலியை சந்தித்து வருகிறார்.

படத்தில் முக்கியமான காட்சிகள் கத்திரிக்கப்பட்டால் ரசிகர்களை எந்த அளவுக்கு சென்றடையும் என்பது சந்தேகம்தான். ஆகையால் கேப்டன் மில்லர் படத்திற்கு இப்போது சென்சார் போர்டு செக் வைத்திருக்கிறது. இப்போது தொடர்ந்து வன்முறை காட்சிகள் படத்தில் வைத்தால் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குனர்கள் நினைத்து இதுபோன்ற கதை களத்தையே எடுத்து வருகிறது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

Also Read : ரெட் கார்டை யாரும் மதிக்காமல் செய்த ஹீரோ.. தனுஷ் அதர்வாவெல்லாம் தெனாவட்டாய் போடும் பேயாட்டம்

- Advertisement -

Trending News