மாமா, உங்களுக்கு ஒரு கதை ரெடி.. ரஜினிக்கு அழைப்பு விடுத்த தனுஷ், கலக்கத்தில் இளம் இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிவடைந்து விட்டன. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சிகிச்சை முடிந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளன. ஏற்கனவே இரண்டு இளம் இயக்குனர்களின் தேர்வு செய்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன.

ரஜினியின் அடுத்த இயக்குனர் போட்டியில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏகப்பட்ட செய்திகள் வந்தன.

இந்நிலையில் தற்போது திடீர் டிவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார் தனுஷ். ரஜினியின் மருமகன் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பவர் பாண்டி என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார்.

இதனால் தற்போது ரஜினிக்கு ஒரு சூப்பர் கதையை எழுதி ரெடி செய்து விட்டதாகவும், அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது அந்த கதையை கூற முடிவு செய்துள்ளதாகவும் தனுஷ் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. இந்த செய்தியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளாராம்.

எப்படியும் அடுத்த படம் நமக்குத்தானே என கனவில் இருந்தாராம். ஆனால் தனுஷ் நமக்கே இப்படி ஷாக் கொடுப்பார் என்று தெரியலையே என கொஞ்சம் சோகத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் உண்மை நிலவரங்கள் என்ன என்பதை காதை தீட்டி வைத்து கேட்டு வருகிறாராம்.

dhanush-rajini-cinemapettai
dhanush-rajini-cinemapettai