ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

4வது முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்.. கூடவே நடிக்கப் போகும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என்று எல்லா மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது இவரின் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதில் தனுஷின் நடிப்பு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அத்ரங்கி ரே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் இது அவருக்கு நான்காவது பாலிவுட் திரைப்படம் ஆகும். மேலும் இந்த படத்தில் தனுசுடன் இணைந்து நடிகர் விக்கி கௌஷலும் நடிக்க இருக்கிறாராம். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான தி கிரே மேன் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு தனுஷ் நம் கலாச்சாரப்படி வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதை பார்த்த விக்கி கௌசலும் தனுஷை மிகவும் பாராட்டி இருந்தார். மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

இதனால் அவர்கள் இருவரின் நடிப்பில் கூடிய விரைவில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது என்று கூறுகின்றனர். அந்த வகையில் தனுஷ் தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார்.

- Advertisement -

Trending News