ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

32 கோடி சொத்து இருந்தும் சாமியாராக வாழ்ந்த தனுஷ் பட நடிகை.. திடீரென எடுத்த அதிரடி முடிவு

Dhanush Movie Actress: தனுஷ் பட நடிகை ஒருவர் 32 கோடி சொத்து சேர்த்து வைத்திருந்தும் சாமியாராக வாழ்ந்து வந்தார். இதற்கு காரணம் தனுஷ் தான் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே புகழின் உச்சிக்கு நடிகை சென்று விட்டார். டாப் நடிகர்கள் பலருடனும் நடிகை ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் சினிமாவில் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு தனது மார்க்கெட் உள்ள போதே இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதாவது மைனா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அமலா பால் தான் அது. விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

இந்நிலையில் தலைவா படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் அமலா பால் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் விஜய் வீட்டார் இடையே மறுப்பு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் சில வருடங்களிலேயே இவர்கள் பிரிந்து விட்டனர்.

மேலும் இவர்களது பிரிவுக்கு காரணம் தனுஷ் தான் என்று அப்போது செய்திதாள்களில் கிசுகிசுக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அமலா பாலுக்கு பட வாய்ப்பு குறைந்ததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்று விட்டார்.

அதன் பிறகு யோகா, ஆன்மீகம் என ஒரு சாமியாராகவே சென்றுவிட்டார். ஆனால் ஏஎல் விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அமலாபால் சிங்கிளாகவே சுற்றி திரிந்த நிலையில் இப்போது திடீரென அவரது பிறந்தநாளில் பாய் பிரண்டுடன் லிப் டு லிப் கிஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

மேலும் அமலாபால் தன்னுடைய 32 வயதில் 32 கோடி சொத்து வைத்திருந்தும் வெறுமையில் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். இப்போது அவர் கமிட்டாகி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே சந்தோஷத்துடன் அமலா பால் எப்போதும் இருக்க வேண்டும் என்ற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

- Advertisement -

Trending News